Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?
சியா விதை நீர் அல்லது சீரகத் தண்ணீர் இவை இரண்டில் எது உடல் எடையை குறைக்க சிறந்தது என்று இங்கு காணலாம்.

Jeera Water vs Chia Seeds Water
இன்றைய ஸ்பீடான வாழ்க்கை முறையில் அனைவருமே உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க விரும்புகிறார்கள். ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி என பல விஷயங்களை பின்பற்றினாலும் நம் வீட்டுக்கு கிச்சனில் இருக்கும் சில பொருட்கள் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது சியா விதை நீர் மற்றும் சீரக தண்ணீர் பற்றி தான் பேசுகிறோம். இவை இரண்டும் பல ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டிருந்தாலும் உடல் எடையை குறைக்க எது சிறந்தது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
சியா விதை நீர் :
சியா விதைகளில் நார்ச்த்து, புரதம், ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் உடல் வீக்கத்தை குறைத்து எடையை குறைக்கும் மற்றும் இதில் இருக்கும் புரதம் தசை வளர்ச்சிக்கு உதவும் மற்றும் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க செய்யும்.
சீரக தண்ணீர் :
சீரகம் சமையலறையில் இருக்கும் முக்கியமான மசாலா பொருள். சீரகத்தில் இரும்புச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கலோரிகள் குறைவாகவும் உள்ளன எனவே சீரகம் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
எது பெஸ்ட்?
நீங்கள் பசியை கட்டுப்படுத்த விரும்பினால் சியா விதை நீரும், செரிமானத்தை மேம்படுத்த விரும்பினால் சீரக தண்ணீரும் குடியுங்கள். மேலும் நிபுணர்கள் பரிந்துரையின் படி, காலையில் சீரக தண்ணீரும், உணவுக்கு பிறகு சியா நீரும் குடித்து வந்தால் உடல் எடை விரைவாக குறைய ஆரம்பிக்கும்.
நினைவில் கொள் :
- உடல் எடையை குறைக்க சியா நீர் மற்றும் சீரக தண்ணீருடன் ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி இணைத்துக் கொண்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
- சீரகத் தண்ணீரை அதிகமாக குடித்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும் அதுபோல சியா விதை தண்ணீரையும் அதிகமாக குடித்தால் வாயு வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை கேட்பது நல்லது.

