ஐயோ..கடல் பட ஹீரோயினா இது? அடையாளமே தெரியாம மாறிப் போன ராதாவின் மகள்; ஷாக் ரிப்போர்ட்!
Radha daughter Thulasi Nair : நடிகை ராதாவின் மகளா இது என்று கேட்கும் அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன துளசி நாயருக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி மாறிப்போனார் என்பது பற்றி பார்க்கலாம்.

துளசி நாயர் உடல் எடை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை ராதா. ஒரு காலத்தில் இவரது படமும், பாடலும் இல்லாமல் எந்தப் படமும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு எத்தனையோ ஹிட் படங்களில் நடித்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ராதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
துளசி நாயர் நடித்த புகைப்படங்கள்
இவருக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என்று இரு மகள்கள் இருக்கின்றனர். இதில் கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் இருவருமே சினிமாவில் நடித்துள்ளனர். கார்த்திகா நாயர் கோ படம் மூலமாக அறிமுகமாகி, அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
ஆளே அடையாளமல் தெரியாமல் மாறிபோன நடிகை ராதாவின் மகள்
இதே போன்று தான் துளசி நாயரும் கடல் மற்றும் யான் ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளியானவை. அதன் பிறகு துளசி நாயர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்த 2 படங்களுக்கும் பெரியளவிற்கு வரவேற்பு இல்லை. இதன் காரணமாக சினிமாவில் வாய்ப்புகளும் வரவில்லை. அதோடு உடல் எடையும் கூடிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆம், துளசி நாயரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் அவர் அதிக உடல் எடையுடன் இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
துளசி நாயர்
கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடிகை ராதாவின் அம்மா சரசம்மா அதாவது துளசி நாயரின் பாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவில் தான் துளசி நாயர் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. அதில் தான் உடல் எடையை கூடிய நிலையில் இருந்துள்ளார். மேலும், அதில் ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் சோகமான தோற்றத்தில் இருந்துள்ளார்.இந்த புகைப்படத்தை பகிர்ந்து ஒருவர் எவ்வளவு காசு பணம் இருந்தால் என்ன, ஹெல்த் விஷயத்தில் இவ்வளவு எப்படி இப்படி அஜாக்கிரதையாக இருப்பாங்க என்று யோசிக்க தோன்றுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.