ஒரே நேர்கோட்டில் சனி-குரு உட்பட 6 கிரகங்கள்: 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.!
Planetary Alignment Effects : பிப்ரவரி 2026-ல் ஆறு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரவுள்ளன. ஜோதிட ரீதியாக இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும்.

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026
பிப்ரவரி 2026-ன் கடைசி வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் 6 முக்கிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன. குரு மிதுன ராசியிலும், சனி மீன ராசியிலும், கும்ப ராசியில் ராகு, புதன் மற்றும் சுக்கிரனுடன் இருக்கிறார்.
பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள், செவ்வாய் மற்றும் சந்திரனும் கும்ப ராசிக்குள் நுழைவார்கள். ஜோதிட ரீதியாக இது சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. இந்த கிரக சேர்க்கை பல ராசிகளுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த ராசிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்கு பிப்ரவரி கடைசி வாரம் அதிர்ஷ்டமான நேரத்தை அளிக்கும். நிலுவையில் உள்ள திட்டங்கள் முடிவுக்கு வரும். வேலையில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாழ்க்கையில் நேர்மறையான நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்டம் உங்கள் கதவுகளைத் தட்டும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் புதிய கூட்டாண்மைகள் ஏற்படும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் பெருகும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவுகள் மேம்படும்.
மீனம்
மீன ராசிக்கு நிதி ரீதியாக நல்ல நேரமாக இருக்கும். தடைபட்ட பணிகள் விரைவாக முடியும். வருமானம் அதிகரிக்கும். ஆனால் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். வேலை, தனிப்பட்ட வாழ்வில் சமநிலை நல்ல பலனைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

