- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
Pandian Stores 2 Serial Today 655th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 654ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முழுக்க முழுக்க தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற தலையாய மூல மந்திரத்தை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பாண்டியனின் 3 மகன்களுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. பாண்டியனின் மூத்த மகனான சரவணனுக்கு மட்டும் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் நடந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் தான் மூத்த மகனான சரவணனுக்கு மட்டும் மனைவி தங்கமயில் உடன் பல பிரச்சனைகள். எப்போதும் உண்மையை பேசாத தங்கமயில் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆபிஸ் வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரில் ஹோட்டலில் சர்வர் வேலை செய்தார். இவ்வளவு ஏன் மயில் தன்னை விட வயதில் 2 வருடங்கள் மூத்தவர் என்று பல அடுக்கடுக்கான உண்மைகளை சரவணன் தனது பெற்றோரிடம் சொல்லாமல் தவித்து வந்தார். ஆனால், இதற்கு மாறாக தங்கமயில் மாமியார் கோமதி மற்றும் மாமனார் சரவணனிடம் வாய்க்கு வந்த பொய்களை அள்ளிவிட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
ஒரு கட்டத்தில் சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறினார். குழந்தை இல்லை என்பதற்காக தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் என்று சரவணன் பற்றி புகார் அளித்தார். இந்த நிலையில் தான் இந்த வார புரோமோ வீடியோவில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரூமுக்குள் ஆரம்பித்த பிரச்சனை இப்போது முச்சந்தி வரைக்கும் வந்துவிட்டது என்று பாண்டியன் சரவணை திட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் இன்றைய 655ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதில், அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தங்கமயில் மட்டும் சாப்பிடாமல் சரவணனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆத்திரமடைந்த சரவணன்
உனக்கும் தங்க மயலுக்கும் இடையில என்ன பிரச்சனை என்று தனது மகன் சரவணனிடம் கேட்டார். ஆனால் சரவணன் அமைதியாக இருந்தார். என்ன பிரச்சனை என்று திரும்ப திரும்ப கோமதி கேட்டார். என்னாலயே தாங்க முடியவில்லை. நீங்கள் எப்படி தாங்குவீர்கள் என்று சரவணன் அடிக்கடி கேட்டார். இதனால் ஆத்திரத்தில் கத்திய சரவணன் நான் சொன்னால் உங்களால் தாங்க முடியாது. என்னாலயே தாங்கமுடியவில்லை. உங்களால் எப்படி தாங்க முடியும் என்று சொல்லி தனது அப்பாவை கட்டிப்பிடித்து அழுதார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
இதைப் பார்த்த குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகன் வாழ்க்கையில் என்னமோ நடந்திருக்கிறது என்று வருத்தப்பட்டனர். அப்போது தான் தங்கமயில் இனிமேல் நாங்கள் இருவரும் சண்டையே போட மாட்டோம் என்று கோமதியிடம் கூறினார். இதைக் கேட்ட சரவணன், இவ்வளவு தூரம் நடந்த பிறகும் கூட நீ இன்னும் பொய் சொல்வதை நிறுத்தவில்லையா? அப்படி என்று கோபத்தில் அவரை அடிக்க பாய்ந்தார், தள்ளியும் விட்டார். இவள் உடம்பு முழுவதும் பொய் தான். நம்ம எல்லோரையும் பொய் சொல்லியே ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி கதறி அழுதார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.