- Home
- Astrology
- Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த ஆண்கள் பிறவிலேயே அதிபுத்திசாலியாக இருப்பார்களாம். அதனால் அவர்கள் எளிதில் புகழையும், வெற்றியையும் அடைந்துவிடுவார்களாம்.

Birth Date
எண் கணிதத்தின் படி, ஒருவது பிறந்த தேதி மற்றும் மாதத்தை வைத்து அவரது குணாதிசயங்கள், ஆளுமை, எதிர்காலத்தை கணிக்க முடியும். அந்த வகையில் எண் கணிதத்தின் படி ,சில குறிப்பிட்ட தேதியில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே அதிபுத்திசாலியாக இருப்பார்களாம். அதனாலே அவர்களை தேடி வெற்றி மற்றும் புகழ் சுலபமாக வருமாம். அது எந்தெந்த தேதிகள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 1
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் ஒன்றாகும். இவர்கள் சூரியனால் ஆளப்படுகிறார்கள். இதனாலே இயற்கையாகவே இவர்கள் தன்னம்பிக்கை மிக்கவராகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்களாம். பிறவியிலேயே அதிபுத்திசாலியான இவர்கள் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள். இதனாலே இவர்கள் சிக்கலான பிரச்சனைகளை கூட மிக எளிதில் தீர்த்து விடுவார்கள். மேலும் வெற்றியை எளிதாக அடைவார்கள்.
எண் 3
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் மூன்றாகும். குரு பகவானால் ஆளப்படும் இவர்கள் இயற்கையாகவே அதிபுத்திசாலி என்பதால் இவர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு பெருமையை சேர்க்கிறார்கள். இவர்களின் விரைவான புத்தி கூர்மையால் புதிய யோசனைகள் மற்றும் கருத்துக்களை விரைவாக புரிந்து கொள்வார்கள்.
எண் 5
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 5 ஆகும். புதனால் ஆளப்படும் இவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம். இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் துணிச்சல் ஆனவர்கள் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள்.

