Birth Date : இந்த 3 தேதியில் பிறந்தவங்க ரொம்ப லக்கி! புகழின் உச்சத்தை தொடுவாங்க
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் புகழின் உச்சத்தை அடைய பிறந்தவர்கள் என்று கூறுகிறது. அது என்னென்ன தேதிகள் என்று இங்கு பார்க்கலாம்.

Numerology
எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த தேதி வைத்து அவரது எதிர்காலத்தை, ஆளுமையை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் உச்சத்தை அடைவதற்காகவே பிறந்தவர்கள் என்று எண் கணிதம் கூறுகிறது. அதாவது செல்வாக்கு, புகழ், பிறரை கவர்ந்திருக்கும் வித்தியாசமான திறன் ஆகியவற்றால் அவர்கள் வாழ்க்கையில் சீக்கிரமாகவே பிரபலமடைவார்களாம். அது எந்தெந்த தேதிகள் என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 1
எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் 1,10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சூரிய கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். இதனால் இயற்கையாகவே இவர்கள் பிறரது கவனத்தை ஈர்க்கும் திறனை கொண்டிருப்பர். மேலும் அதீத தன்னம்பிக்கை உடையவர். வழிநடத்தும் ஊக்கம் அளிக்கும் இவர்களின் இந்த திறனால் பலரால் போற்றப்படுவர். இவர்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் பிரகாசிக்க கூடிய திறன் இவர்களுக்கு உண்டு.
எண் 3
எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் 3,12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வியாழன் கிரகத்தால் ஆளப்படுவார்கள். இவர்கள் இயற்கையாகவே பிறரை கவர்ந்திருக்கும் திறன் உள்ளவர்கள். சமூக அமைப்புகளில் செழித்து. இவர்களிடம் இருக்கும் ஊக்கமளிக்கும் திறன் பிறரது கவனத்தை ஈர்க்கும்.
எண் 5
எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் 5,14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுவார்கள். இவர்கள் ரொம்பவே புத்திசாலிகள் என்பதால் இயற்கையாகவே அவர்கள் திறனையானர் என்பதை காட்டுகிறது. இவர்களது வார்த்தை பிறரை கவர்ந்திழுக்கும்.
