Birth Date : இந்த தேதில பிறந்தவங்க கிட்ட உஷாரா இருங்க 'பேசியே' மயக்கிடுவாங்க!
எண் கணிதத்தின்படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் பேச்சில் ஒருவித ஈர்ப்பு கொண்டவர்கள். யாரிடம் எப்படி பேசினால் தங்கள் பக்கம் ஈர்க்க முடியுமென்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

Most Persuasive Birthdates
எண் கணிதப்படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் பேச்சால், புத்திசாலித்தனத்தால் யாரையும் எளிதில் கவர்ந்துவிடுவார்கள். மற்றவர்களின் மனதை எளிதில் புரிந்துகொள்வார்கள். குறிப்பாக, யாரிடம் எப்படி பேசினால் தங்கள் பக்கம் ஈர்க்க முடியுமென்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அது எந்தெந்த தேதிகள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
குருவின் ஆதிக்கம்
எந்த மாதத்திலும் 3, 5, 6, 12, 14, 21, 23, 27 தேதிகளில் பிறந்தவர்கள் தனித்துவமானவர்கள். குறிப்பாக 3, 12, 21 தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்தால், பேச்சில் ஞானமும் நம்பிக்கையும் கொண்டு மற்றவர்களை எளிதில் நம்ப வைப்பார்கள்.
புதன் கிரகத்தின் ஆதிக்கம்
எந்த மாதத்திலும் 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் புதன் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பார்கள். புதன் பேச்சு, புத்தி, முடிவெடுக்கும் திறனைத் தரும். இவர்கள் மற்றவர்களின் மனதை எளிதில் திசை திருப்புவார்கள். யார் என்ன நினைக்கிறார்கள் என்பதை எளிதில் யூகிப்பார்கள்.
சுக்கிரனின் ஆதிக்கம்
எந்த மாதத்திலும் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் மீது சுக்கிரனின் ஆதிக்கம்இருக்கும். இவர்களுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இவர்கள் பேசினால் மற்றவர்கள் கேட்பதோடு, நட்பு பாராட்டவும் விரும்புவார்கள். உறவுகளை நன்கு புரிந்து கொள்வார்கள். அதனால் மற்றவர்கள் எளிதில் ஈர்க்கப்படுவார்கள்.
சந்திரனின் ஆதிக்கம்
எந்த மாதத்திலும் 27 ஆம் தேதி பிறந்தவர்கள் மீது சந்திரனின் ஆதிக்கம் அதிகம். இவர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளைப் படிப்பதில் வல்லவர்கள். மற்றவர்களின் கண்களில் உள்ள வலி, ஆசை, பயம் போன்றவற்றை எளிதாகக் கண்டறிவார்கள். இதனால் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
எந்தத் துறை இவர்களுக்கு சிறந்தது?
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களில் யார் உண்மையானவர், யார் நடிக்கிறார் என்பதை எளிதில் புரிந்து கொள்வார்கள். இந்த குணத்தால் இவர்கள் அரசியல், வணிகம், மக்கள் தொடர்பு, ஊடகம் போன்ற துறைகளில் வெற்றி பெறுவார்கள்.
