- Home
- Astrology
- Birth Date : இந்த தேதில பிறந்தவங்கள நம்பி எந்த வேலையும் கொடுக்காதீங்க! இவங்க மோசமான சோம்பேறியா இருப்பாங்க
Birth Date : இந்த தேதில பிறந்தவங்கள நம்பி எந்த வேலையும் கொடுக்காதீங்க! இவங்க மோசமான சோம்பேறியா இருப்பாங்க
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் சோம்பேறியாக இருப்பார்களாம். எந்த வேலை கொடுத்தாலும் அதை சரியாக செய்யமாட்டார்களாம். அது எந்தெந்த தேதிகள் என்று இங்கு பார்க்கலாம்.

Lazy Birth Dates Numerology
ஜோதிடம் மற்றும் எண்கணித சாஸ்திரப்படி, பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவரின் குணாதிசயங்களை அறியலாம். கிரக நிலைகள், ராசி, எண்களின் தாக்கம் ஆகியவை ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கின்றன. அந்த வகையில் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் சோம்பேறியாக இருப்பார்களாம். எந்த வேலை கொடுத்தாலும் அதை சரியாக செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்களாம். அது எந்தெந்த தேதிகள் என்று இங்கு பார்க்கலாம்.
எண் 2
எந்த மாதத்திலும் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 2. இது சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளது. இவர்கள் அதிகம் யோசிப்பார்கள், சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள். தாமதமாக எழுவது, வேலைகளை தாமதமாக தொடங்குவது, சிறிய வேலைகளுக்கு கூட நீண்ட நேரம் எடுப்பது போன்ற பழக்கங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களிடம் அதிகமாகவே இருக்கும் என்கிறது எண் கணிதம்.
எண் 7
எந்த மாதத்திலும் 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 7. இதன் மீது கேதுவின் தாக்கம் அதிகம். இவர்கள் பெரும்பாலும் உள்முக சிந்தனையாளர்கள், கற்பனை உலகில் மூழ்கியிருப்பார்கள். இவர்களிடம் சுறுசுறுப்பு குறைவாக இருக்கும். வேலையைத் தொடங்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள், அவசரமாக முடிக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
எண் 6
எந்த மாதத்திலும் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 6. இது சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. இவர்கள் அழகு, சுகம் ஆகியவற்றை விரும்புவார்கள். உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளைத் தவிர்ப்பார்கள். நல்ல உணவு, ஓய்வில் மூழ்கி வேலைகளைத் தள்ளிப் போடுவது இவர்களுக்கு வழக்கம். இதனால் இவர்கள் சோம்பேறிகளாகக் காணப்படுவார்கள்.

