Astrology: குரு பகவான் ஆசியால் ராஜயோகம் பெறும் 4 ராசிகள்.. இனி பணமழை தான்!
Astrology: குருவின் மகம் நட்சத்திரப் பெயர்ச்சியால் தொழில் வளர்ச்சி, வியாபார வெற்றி மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் குடும்ப மகிழ்ச்சியும் பெருகும்.

குருவின் ஆசியால் ராஜயோகம் பெறும் 4 ராசிகள்
நவகிரகங்களில் சுப கிரகங்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கக்கூடியவர் குரு பகவான். அறிவு, கல்வி, செல்வம், புத்திர பாக்கியம், ஆன்மீக ஞானம் மற்றும் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு காரகனாக விளங்குபவர் இவரே. பொதுவாக ஒரு ராசியில் ஒரு வருடம் வரை சஞ்சரிக்கும் குரு பகவான், அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றுவது வழக்கம்.
தற்போது கடக ராசியில் உள்ள ஆயில்ய நட்சத்திரத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அக்டோபர் 31 ஆம் தேதி அன்று சிம்ம ராசிக்குள் பிரவேசிக்கிறார். அதுவும் குறிப்பாக, ஞான காரகனான கேது பகவானால் ஆளப்படும் மகம் நட்சத்திரத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார். குருவின் இந்த சக்திவாய்ந்த நட்சத்திரப் பெயர்ச்சியால், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றி மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கப் போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் மகம் நட்சத்திர சஞ்சியமானது, வாழ்க்கையில் பல புதிய திருப்புமுனைகளையும் பொன்னான வாய்ப்புகளையும் கொண்டு வந்து சேர்க்கும். நீண்ட நாட்களாக தடையை சந்தித்து வந்த காரியங்கள் அனைத்தும் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். பண வரவு அதிகரிப்பதால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் மரியாதையும் உயரும்.
குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமை பலப்படும். உறவினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியான தருணங்களை கழிக்க வாய்ப்புண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கொழிக்கும் காலமாக இது அமையும். உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் பன்மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியம் மிகவும் திருப்திகரமாக இருக்கும்.
2. சிம்மம்
தங்கள் சொந்த ராசியில் குரு பகவான் நட்சத்திரப் பெயர்ச்சி அடைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு கோடிகளில் கொட்டும் யோகத்தைத் தரும் என்றால் மிகையாகாது. இந்த காலகட்டத்தில் உங்களின் தலைமைப் பண்பு ஓங்கும். உங்களைத் தேடி புதிய பொறுப்புகளும் பதவிகளும் வரும். நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரிய அளவில் லாபம் ஈட்டுவீர்கள்.
நீண்ட காலமாக வேலையின்றித் தவிப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து தகுதிக்கேற்ற வேலை அமையும். பணத்தைச் சேமிக்கும் வழிகளும் கைகூடும். உங்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் உத்தியோகத்தில் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருந்து உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.
3. மகரம்
மகர ராசிக்காரர்களுக்கும் குருவின் இந்த நட்சத்திர மாற்றம் ஏராளமான நற்பலன்களை வாரி வழங்கக் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் துறையில் நீண்டகாலமாக எதிர்பார்த்த இலக்குகளை அடைவீர்கள். உங்களிடம் இருக்கும் ஆற்றல் மற்றும் புத்தி கூர்மை மூலம் அனைத்து திட்டங்களையும் குறித்த நேரத்தில் வெற்றிகரமாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
மன அழுத்தங்கள் நீங்கி சரியான மனச் சமநிலையைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்வில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் இனிமையான பொழுதைக் கழிப்பீர்கள். முந்தைய உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
4. துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் எதிர்பாராத பல ஆச்சரியங்களையும் லாபங்களையும் தரப் போகிறது. பலநாள் கனவுகள் நனவாகும் தருணம் இது. புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்.
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் பங்குதாரர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். கலை மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வியில் சிறந்து விளங்கக் கூடிய சூழல் அமையும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

