MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ஆயில்யத்தில் செவ்வாய்: மேஷம் முதல் மகரம் வரை கொட்டப் போகும் அதிர்ஷ்டம்.. விரிவான பலன்கள்!

Astrology: ஆயில்யத்தில் செவ்வாய்: மேஷம் முதல் மகரம் வரை கொட்டப் போகும் அதிர்ஷ்டம்.. விரிவான பலன்கள்!

Astrology: செவ்வாய் ஆயில்யம் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். விரிவான பலன்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 20 2026, 07:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
Image Credit : AI

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாக போற்றப்படும் செவ்வாய் பகவான், வீரம், துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் தலைமைப் பண்பிற்கு உரிய காரணியாகத் விளங்குகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், பொதுவாக ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை சஞ்சாரம் செய்வார். இந்த காலக்கட்டத்தில் அவர் தனது நட்சத்திரத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொள்வதுண்டு. கிரகங்களின் இந்த சுற்றுப்பயண மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், அக்டோபர் 17 அன்று ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ள செவ்வாய் பகவான், வரும் நவம்பர் 12 வரை அதே நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். செவ்வாயின் இந்த நட்சத்திர இடமாற்றம் ஜோதிட ரீதியில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே எதிரொலித்தாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மட்டும் தொழில் ரீதியான முன்னேற்றமும், எதிர்பாராத பண வரவும் கிடைக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம்
Image Credit : Asianet News

1. மேஷம்

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் தவித்த காரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும். நிதி நிலையில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். எனினும், புதிய முதலீடுகளில் இறங்கும் போது மட்டும் உரிய ஆலோசனைகளைப் பெறுவது உசிதமானது.

35
2. கடகம்
Image Credit : Asianet News

2. கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் பொருளாதாரரீதியில் மிகச் சிறப்பான பலன்களை அள்ளித் தரும். புதிய வருமான மூலங்கள் உதயமாவதுடன், எதிர்பாராத தனலாபமும் உண்டாகும். பல வருட உழைப்புக்கான பலனை இப்போது முழுமையாக அனுபவிக்கத் தொடங்குவீர்கள். குடும்ப சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகத் தீரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் கைகூடும். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி சார்ந்த திட்டமிடல்களில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.

45
3. விருச்சிகம்
Image Credit : Asianet News

3. விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பாய்ச்சல் ஏற்படும் காலகட்டமாக இது அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் தேடி வரக்கூடும். வருமானம் உயர்ந்து பொருளாதார பற்றாக்குறை நீங்கும். சொந்தத் தொழிலை விரிவுபடுத்துவதற்கான சாதகமான சூழல் நிலவும். நீண்ட நாளாக வேலை தேடி ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். எந்தவொரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன், அதன் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்ப்பது நன்மை பயக்கும்.

55
4. மகரம்
Image Credit : Asianet News

4. மகரம்

மகர ராசியினருக்கு அவர்கள் உழைத்த உழைப்புக்கான அங்கீகாரம் உத்தியோகக் தளத்தில் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படுவதால், இதுவரை இருந்த கடன் தொல்லைகளில் இருந்து படிப்படியாக விடுபடுவீர்கள். புதிய வாகனம் அல்லது சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும் நேரம் இது. அலுவலகத்தில் உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். உத்தியோக நிமித்தமான பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான செய்திகள் வந்துசேரும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: இந்த வாரம் காதலில் விழப்போகும் ராசி எது? அக்டோபர் 20-24 காதல் ராசிபலன்!
Recommended image2
Silver Lucky: இந்த 4 ராசிக்காரர்கள் வெள்ளி அணிந்தால் அதிர்ஷ்டம் கொட்டுமா? எந்த நகை அணியணும் தெரியுமா?
Recommended image3
Astrology: Money கொடுக்கும் சனி.! வெற்றி தரும் வியாழன்.! புத்தி தரும் புதன்.! 5 நட்சத்திரங்களுக்கு திடீர் பணக்கார யோகம்.!
Related Stories
Recommended image1
Astrology: புதனின் நட்சத்திர மாற்றம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கும்.. பணமழை!
Recommended image2
Astrology: பொய் பேசப் பிடிக்காத நேர்மையான 4 ராசிக்காரர்கள்.. மனதில் பட்டதை கொட்டி விடுவார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved