MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: புதனின் நட்சத்திர மாற்றம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கும்.. பணமழை!

Astrology: புதனின் நட்சத்திர மாற்றம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கும்.. பணமழை!

Mercury Star Transit: புத‌ன் பகவான் விசாக நட்சத்திரத்திற்கு மாறியுள்ள நிலையில் 4 ராசிகளுக்கு ராஜயோக பலன்களும், எதிர்பாராத நன்மைகளும் கிடைக்கவுள்ளன. தொழில் வளர்ச்சி மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். முழு பலன்களை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 13 2026, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புதனின் நட்சத்திர மாற்றம்
Image Credit : AI

புதனின் நட்சத்திர மாற்றம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் இளவரசனாக போற்றப்படும் புதன் பகவான் அறிவு, பேச்சுத்திறன், வியாபாரம் மற்றும் தகவல் தொடர்புக்கு காரணியாக விளங்குகிறார். இவர் நிகழ்த்தும் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் மிக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில், தற்போது துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்து வந்த புதன் பகவான், அக்டோபர் 12 அன்று விசாக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகியுள்ளார். புதனின் இந்த நட்சத்திர மாற்றம் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளையும், ராஜயோக பலன்களையும் அள்ளி வழங்கப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலம் பொற்காலமாக இருக்கப் போகிறது என்பதை முழுமையாக காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கடகம் (Cancer)
Image Credit : Asianet News

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திரப் பெயர்ச்சியானது தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்த போகிறது. நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த பல்வேறு பிரச்சினைகள் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு புதிய பொறுப்புகள், உயர்வுகள் அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலுவையில் இருந்த அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவேறும்.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமானது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவார்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றியும் செழிப்பும் நிறைந்த மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

35
கன்னி (Virgo)
Image Credit : Asianet News

கன்னி (Virgo)

புதனின் சொந்த ராசியான கன்னி ராசிக்கு இந்த நட்சத்திர மாற்றம் ஏராளமான நல்வாய்ப்புகளையும், எதிர்பாராத வெற்றிகளையும் தரவுள்ளது. கடின உழைப்புக்கான முழுமையான பலன் இக்காலத்தில் கைகூடும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற சிறந்த வேலை அமையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய லாபகரமான ஒப்பந்தங்களும், பெரிய ஆர்டர்களும் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் தகுதியான வரன் அமையும். உடல்நலம் சீராகவும், மனநிறைவோடும் காணப்படுவீர்கள்.

45
மகரம் (Capricorn)
Image Credit : Asianet News

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த விசாக நட்சத்திர மாற்றம் பொருளாதாரரீதியாகவும், குடும்ப வாழ்க்கையிலும் பல நன்மைகளை வாரி வழங்க காத்துக்கொண்டிருக்கிறது. நீண்டகாலமாக தடைபட்டு நின்ற நிதி உதவிகள் அல்லது பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான நல்ல செய்திகள் மனதிற்கு நிம்மதியைத் தரும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மற்றும் மரியாதை உயரும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் எதிர்காலத்திற்குத் தேவையான முக்கியமான தொடர்புகள் கிடைக்கும்.

55
கும்பம் (Aquarius)
Image Credit : Asianet News

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ஆன்மீக நாட்டம் மற்றும் மன அமைதியைத் தரும் காலமாக அமையும். வாழ்வில் ஒரு தெளிவான சூழ்நிலை உருவாகும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரித்து, குடும்பத்துடன் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களின் முழுமையான ஆதரவு மனதிற்கு பலம் சேர்க்கும். குழந்தைகளின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் மிகத் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vipareeta Shukra Yoga : விபரீத சுக்கிர யோகத்தால் கோடிகளில் சம்பாரிக்கப் போகும் 4 ராசிகள்! துர்கையும் துணை நிற்பாள்!
Recommended image2
மேஷம் முதல் கன்னி வரை.. உங்கள் ராசிக்கான இஷ்ட தெய்வம் யார்? வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன?
Recommended image3
Guru Vakra Peyarchi : வக்ரமாகி வரம் கொடுக்கப்போகும் குரு பகவான்... வக்ர பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கும் 6 ராசிகள்!
Related Stories
Recommended image1
சுக்கிரன் அஸ்தமனத்தால் 'இந்த' 4 ராசிகளுக்கு பணமழை.. கோடீஸ்வர யோகம் ஸ்டார்ட்!
Recommended image2
சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved