MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்!

சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Shani Utthirattathi Nakshatra Transit: சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரப் பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் தேடி வந்து விடிவுகாலம் பிறக்கப் போகிறது. இவை எந்தெந்த ராசிகள்? என விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 11 2026, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரப் பெயர்ச்சி
Image Credit : Asianet News

சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரப் பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களில் நீதிமானாகவும், அவரவர் கர்மாக்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவராகவும் சனி பகவான் போற்றப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக இயங்கக்கூடிய கிரகமான சனி, ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பதுடன், அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றங்கள் அனைத்து ராசிகளின் மீதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான், அக்டோபர் 9 ஆம் தேதி அன்று வக்ர நிலையில் ரேவதி நட்சத்திரத்திலிருந்து விலகி, தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் பிரவேசித்துள்ளார். சனி பகவானின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மகத்தான நன்மைகளையும், வாழ்க்கையில் புதிய திருப்புமுனைகளையும் தரப்போகிறது. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகிறது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக அமைகிறது. உங்களின் கடின உழைப்புக்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி, பொருளாதார நிலை வலுவடையும். எங்கோ முடங்கிப் போயிருந்த பணம் எதிர்பாராத விதமாக கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகும். இதுவரை தாமதமாகி வந்த சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும்.

35
மிதுனம்
Image Credit : Pixabay

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மிகச்சிறந்த பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் நிலுவையில் உள்ள திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்புகள் வரக்கூடும்.

45
கன்னி
Image Credit : Pixabay

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி பல வழிகளிலும் நன்மைகளை வாரி வழங்கும். வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும், உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் இடையே நல்ல சமநிலையை பேண உங்களால் முடியும். மாணவர்களுக்கு இந்த காலம் கல்வித்துறையில் சிறப்பான முன்னேற்றத்தைத் தரும். உயர்கல்விக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், விரும்பிய படிப்புகளில் சேரும் யோகமும் அமையும். இலக்குகளை நிர்ணயித்து அவற்றை எளிதில் அடைவீர்கள்.

55
துலாம்
Image Credit : Pixabay

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரரீதியாக இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மங்களகரமான பலன்களை வழங்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, அதற்கான பாராட்டுக்களும் பதவி உயர்வுகளும் தேடி வரும். நீண்ட காலமாக தொழிலில் சந்தித்து வந்த முட்டுக்கட்டைகள் மற்றும் போட்டிகள் விலகும். உடன் பணிபுரிபவர்களின் முழு ஒத்துழைப்புடன் திட்டங்களை நிர்ணயித்த நேரத்திற்குள் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு: ஜோதிட கணக்கீடுகளின் அடிப்படையில் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேற்கண்ட ராசிக்காரர்கள் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் எதிர்காலத்தை மேலும் வளமாக்கிக் கொள்ளலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhvaja Yoga: குரு - கேது சேர்க்கையால் உருவாகும் த்வஜ யோகம்..அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் யார்? அதிரடி மாற்றம் யாருக்கு?
Recommended image2
Kendra Yoga : சுக்கிரன் – செவ்வாய் உருவாக்கும் கேந்திர யோகம்! 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்
Recommended image3
Astrology: ராகு – கேது பெயர்ச்சியால் தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை! இந்த 3 ராசிக்காரர்கள் ரெடியா? டிசம்பர் 5 வரை பொற்காலம்.!
Related Stories
Recommended image1
சனி அமாவாசை யோகம்: இந்த 4 ராசிகளுக்கு இன்று முதல் அதிர்ஷ்ட மழை.. கோடீஸ்வர யோகம்!
Recommended image2
Atrology: ஏழரையில் பொங்கு சனி & ராகு புத்தியில் புதன் திசை.! கோடிகளைக் குவிக்கப் போகும் 4 நட்சத்திரங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved