MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சனி அமாவாசை யோகம்: இந்த 4 ராசிகளுக்கு இன்று முதல் அதிர்ஷ்ட மழை.. கோடீஸ்வர யோகம்!

சனி அமாவாசை யோகம்: இந்த 4 ராசிகளுக்கு இன்று முதல் அதிர்ஷ்ட மழை.. கோடீஸ்வர யோகம்!

Shani Amavasya 2026: புரட்டாசி சனி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசைக்கு பிறகு 4ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டமும், தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபமும் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிகள்? என இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 10 2026, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சனி அமாவாசை யோகம்
Image Credit : AI

சனி அமாவாசை யோகம்

பஞ்சாங்க முறைப்படி, அமாவாசை திதியானது சனிக்கிழமையில் வரும்போது அது 'சனி அமாவாசை' என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு புரட்டாசி மாத அமாவாசை அக்டோபர் 10-ஆம் தேதியான இன்று சனிக்கிழமையில் அமைவதுடன், பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க உகந்த மகாளய அமாவாசையும் சேர்ந்து வருவது மிகவும் அரிதான மற்றும் ஆன்மீக ரீதியில் உன்னதமான ஒரு நாளாகக் கருதப்படுகிறது.

நீதியையும் கர்ம வினைகளையும் வழங்கும் சனி பகவானை இந்த நாளில் வழிபடுவதும், தான-தருமங்கள் செய்வதும், முன்னோர்களை நினைத்து வழிபாடுகள் நடத்துவதும் ஏழரைச் சனி, கண்டக சனி மற்றும் பித்ரு தோஷங்களின் தாக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவும் என்பது ஐதீகம். ஜோதிடக் கணக்கீடுகளின் அடிப்படையில், இன்றைய சனி அமாவாசை சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தையும் பல நன்மைகளையும் வழங்கப் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. ரிஷபம்
Image Credit : Asianet News

1. ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த சனி அமாவாசை பல சாதகமான மாற்றங்களை அள்ளி வழங்க காத்திருக்கிறது. நீங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறும். வியாபாரம் செய்பவர்களுக்கு சனி பகவானின் அருள் முழுமையாக கிடைப்பதால், லாபம் பன்மடங்கு பெருகும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமணம் தொடர்பான கவலைகள் நீங்கி நல்ல தீர்வு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சங்களைத் தொடுவதற்கான பொன்னான காலம் இதுவாகும்.

35
2. சிம்மம்
Image Credit : Asianet News

2. சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் பெரும் லாபத்தையும், தொழில் ரீதியான முன்னேற்றத்தையும் கொண்டுவரும். உங்களின் தனித்துவமான திறமை அலுவலகத்தில் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் முழுமையாகக் கிடைக்கும். சுயதொழில் தொடங்குவோர் அல்லது வெளிநாட்டு தொடர்புகளுடன் வியாபாரம் செய்ய விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த தொடக்கமாக அமையும். உங்களின் நீண்டகால லட்சியங்களை அடைவதற்கு இந்தப் புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.

45
3. துலாம்
Image Credit : Asianet News

3. துலாம்

நீண்ட காலமாக பல்வேறு பிரச்சனைகளையும் சவால்களையும் சந்தித்து வந்த துலாம் ராசியினருக்கு இந்த சனி அமாவாசை பெரும் மன நிம்மதியை தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தைக் கண்டு, சேமிப்பையும் உயர்த்திக் காட்டுவார்கள். குடும்பத்தில் கணவன்-மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

55
4. கும்பம்
Image Credit : Asianet News

4. கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பொற்காலமாக மாறக்கூடும். குறிப்பாகப் பணியில் இருப்போருக்கு எதிர்பாராத நன்மைகளும் புதிய பதவி உயர்வுகளும் தேடி வரலாம். நிதி நிலைமையில் குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையும் வளர்ச்சியும் ஏற்படும். ஆரோக்கியம் அருமையாக இருப்பதால், உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையைச் சிறப்பாகச் சமன் செய்வீர்கள். இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் உங்களுக்குப் புத்துணர்ச்சியையும், பயனுள்ள அனுபவங்களையும் வழங்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகள், ஐதீகங்கள் மற்றும் பொதுவான பலன்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை அல்ல. ஜோதிட பலன்கள் மற்றும் ராசி பலன்கள் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட ஜாதக அமைப்பு, கிரக நிலைகள் மற்றும் தசபுத்தி ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடலாம். ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போதோ அல்லது உடல்நலம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களிலோ தகுந்த நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Golden Crown Rajayoga : உங்கள் வாழ்க்கையை மாற்றும் தங்க மகுட ராஜயோகம்! விஜயதசமியிலிருந்து 5 ராசிகளுக்கு ஜாக்பாட்!
Recommended image2
Rahu Ketu Transit: ராகு, கேது பெயர்ச்சியால் ஜாக்பாட்! பெறப்போகும் 6 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Recommended image3
Trigrahi yoga : சூரியன், புதன், சுக்கிரன் ஒரே ராசியில்.. உருவாகும் திரிகிரகி யோகம் – இந்த 5 ராசிகளுக்கு பணமழை!
Related Stories
Recommended image1
Astrology: திரிகிரக யோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்.. பணமழை!
Recommended image2
Astrology: பல ஆண்டுகளுக்கு பின் அரிதான குரு-கேது சேர்க்கை.. 4 ராசிகளுக்கு ஜாக்பாட்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved