MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: பொய் பேசப் பிடிக்காத நேர்மையான 4 ராசிக்காரர்கள்.. மனதில் பட்டதை கொட்டி விடுவார்கள்!

Astrology: பொய் பேசப் பிடிக்காத நேர்மையான 4 ராசிக்காரர்கள்.. மனதில் பட்டதை கொட்டி விடுவார்கள்!

Astrology: ஜோதிட சாஸ்திரத்தின்படி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் கபடமற்ற சுபாவம் கொண்ட ராசிக்காரர்கள் யார்? இந்த செய்தியில் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 19 2026, 07:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பொய் பேசப் பிடிக்காத நேர்மையான 4 ராசிக்காரர்கள்
Image Credit : AI

பொய் பேசப் பிடிக்காத நேர்மையான 4 ராசிக்காரர்கள்

இன்றைய வேகமான மற்றும் போட்டி நிறைந்த சூழலில், மனதில் பட்டதை எந்தவித பாசாங்கும் இன்றி வெளிப்படையாக பேசுபவர்களை பார்ப்பது மிகவும் அரிது. சிலர் சூழ்நிலைக்கு ஏற்ப முகமூடி அணிந்து வாழ்ந்தாலும், இயல்பாகவே உள்ளதை உள்ளபடி பேசும் குணம் கொண்டவர்களும் உண்டு.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் எப்பேர்ப்பட்ட சூழலிலும் உண்மையை முகத்திற்கு நேராகப் பேசும் தைரியம் கொண்டவர்கள். இவர்களின் இந்த வெளிப்படையான தன்மை சில சமயங்களில் இவர்களுக்குப் பலம் சேர்த்தாலும், சில நேரங்களில் சிக்கலையும் ஏற்படுத்தக்கூடும். எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படிப்பட்ட கபடமற்ற சுபாவம் கொண்டவர்கள் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம்
Image Credit : Asianet News

1. மேஷம்

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள், தைரியத்திற்கும் வெளிப்படைத்தன்மைக்கும் பெயர் பெற்றவர்கள். எந்தவொரு விஷயத்தையும் சுற்றி வளைத்துப் பேச இவர்களுக்குப் பிடிக்காது. சொல்ல வேண்டியதை யாரிடமும் தயங்காமல் நேரடியாக கூறிவிடுவார்கள். மனதில் எதையும் வைத்துக் கொண்டு புழுங்குவது இவர்களின் சுபாவமே அல்ல. மற்றவர்கள் இதை சில சமயம் முரட்டுத்தனமாகப் பார்த்தாலும், போலியான முகஸ்துதியை விட கசப்பான உண்மையும் நன்மையே என்று உறுதியாக நம்புபவர்கள் இவர்கள்.

35
2. தனுசு
Image Credit : Asianet News

2. தனுசு

குரு பகவானின் ஆதிக்கம் பெற்ற தனுசு ராசிக்காரர்கள், இயற்கையிலேயே உண்மையை நேசிப்பவர்கள். எதிலும் துணிச்சலை விரும்பும் இவர்கள், பேசுவதிலும் அதே தைரியத்தை கடைப்பிடிப்பார்கள். தங்களின் கருத்தை எவ்வித பயமுமின்றி பொதுவெளியில் முன்வைப்பார்கள். சில நேரங்களில் இவர்களின் நேரடியான பேச்சு மற்றவர்களைத் காயப்படுத்தலாம். ஆனால், யாரிடமும் உள்நோக்கத்துடன் இவர்கள் எதையும் பேசுவதில்லை. 'நேர்மையே சிறந்த கொள்கை' என்பதைத் தங்கள் வாழ்வின் மூலமந்திரமாகக் கொண்டவர்கள் தனுசு ராசிக்காரர்கள்.

45
3. விருச்சிகம்
Image Credit : Asianet News

3. விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களைப் பற்றிப் பலரும் அவர்கள் ஒரு மர்மமான மனிதர்கள் என்று நினைக்கலாம். ஆனால், உண்மையை மூடி மறைப்பதில் இவர்களுக்குச் சுத்தமாக உடன்பாடு கிடையாது. எதையும் யோசித்து நிதானமாகப் பேசினாலும், அந்த வார்த்தைகளில் நூறு சதவீதம் உண்மை இருக்கும். உங்களுடைய சந்தேகங்களுக்கு இவர்கள் அளிக்கும் பதில்கள் ஆரம்பத்தில் சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்றாலும் அதுவே நிஜமாக இருக்கும். நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் இவர்கள், மற்றவர்களிடமும் அதே வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள்.

55
4. மகரம்
Image Credit : Asianet News

4. மகரம்

மிகவும் முதிர்ச்சியான சிந்தனையும், தெளிவான இலக்கும் கொண்டவர்கள் மகர ராசிக்காரர்கள். வீண் விவாதங்களிலும், வெற்றுப் பொய்களிலும் நேரத்தை வீணடிப்பது இவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. சுற்றியுள்ளவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் இவர்கள் தயங்க மாட்டார்கள். சூழல் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அலுவலகமாகட்டும், சொந்த வாழ்க்கையாகட்டும் எல்லாவற்றிலும் வெளிப்படையான உரையாடல்களையே மகர ராசிக்காரர்கள் பெரிதும் விரும்புவார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள ஜோதிடத் தகவல்கள் மற்றும் கணிப்புகள் அனைத்தும் பாரம்பரிய ஜோதிட நூல்கள் மற்றும் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் வாசகர்களின் தகவலுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. மனிதர்களின் ராசியை, தோற்றங்களை வைத்து அவர்களின் குணங்களை மதிப்பிட முடியாது. வாசகர்கள் இதனை ஒரு சுவாரஸ்யமான தகவலாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Money Objects: உங்கள் ராசிக்கு ஏற்ற செல்வப் பொருள் எது தெரியுமா? 12 ராசிகளுக்கான அதிர்ஷ்டப் பொருள்கள்!
Recommended image2
Vijayadashami Astrology : இனி எல்லாமே வெற்றிதான்! புதிய முயற்சியில் வெல்லப்போகும் 5 ராசிகள்!
Recommended image3
Maha Ashtami 2026: மகா அஷ்டமி இரவில் உருவாகும் அரிய யோகம்! இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தான்
Related Stories
Recommended image1
ஐப்பசியில் ராஜயோகம்: தீபாவளிக்கு முன் பணமழை.. இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்!
Recommended image2
Astrology: புதனின் நட்சத்திர மாற்றம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கும்.. பணமழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved