ஐப்பசியில் ராஜயோகம்: தீபாவளிக்கு முன் பணமழை.. இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்!
Aipasi Raja Yogam: ஐப்பசி மாதம் மிதுனம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தையும் தரவுள்ளது. இது தொடர்பாக விரிவான பலன்களை பார்க்கலாம்.

ஐப்பசி மாத ராசிபலன் 2026
புரட்டாசி மாதம் நிறைவடைந்து, பண்டிகைகள் நிறைந்த ஐப்பசி மாதம் விரைவில் தொடங்க உள்ளது. ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் மிகுந்த சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தில், நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
இந்த ஐப்பசி மாதத்தில் நிகழவுள்ள கிரக மாற்றங்கள் மற்றும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலித்தாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தையும் தரப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்த முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
1. மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு ஐப்பசி மாதம் மிகச் சிறந்த பலன்களைக் தரும் மாதமாக அமையப் போகிறது. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் இந்த காலகட்டத்தில் ஈடேறும், இது உங்களுக்கு மனநிறைவையும் நிம்மதியையும் தரும். சமுதாயத்தில் உங்கள் புகழ் மற்றும் மரியாதை உயரும். தொழில் மற்றும் வணிகத்தில் பெரிய அளவிலான வெற்றிகளை பெறலாம்.
நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வலுப்பெறுவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ள இந்த மாதம் உகந்தது என்பதால், தைரியமாக புதிய முயற்சிகளில் இறங்கலாம்.
2. சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் பொற்காலமாக மாறப் போகிறது. இந்த மாத கிரக நிலைகளின் மாற்றத்தால் எதிர்பாராத பண வரவும், நிதி நன்மைகளும் தேடி வரும். சொத்து மற்றும் வீடு சம்பந்தமான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தினரின் முழுமையான ஒத்துழைப்பும் அன்பும் உங்களுக்குக் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய மற்றும் லாபகரமான வாய்ப்புகள் கத தட்டும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உண்டாகலாம். இந்த புதிய வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.
3. விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை, ஐப்பசி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். கிரகங்களின் சஞ்சாரம் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு சேர்க்கும். உங்களது தன்னம்பிக்கையும் திறமையும் இந்த மாதத்தில் பன்மடங்கு அதிகரிக்கும்.
திட்டமிட்ட உத்திகளை சரியாகச் செயல்படுத்துவதன் மூலம் பெரிய வெற்றிகளை தொடுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கான அதிகாரமும் நற்பெயரும் உயரும். மனதுக்குப் பிடித்தமான நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்து, நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மகிழ்ச்சியைப் பெற்றுத் தரும் மாதமாக இது அமையும்.
4. கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் வெற்றிகள் குவியும் மாதமாகப் பிறந்துள்ளது. உங்களை வாட்டி வதைத்த பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த பல லட்சியங்கள் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.
குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கிடையே அன்பும் புரிதலும் பலப்படும். உங்களுடைய வாழ்க்கைத்துணைக்கு சில ஆச்சரியப் பரிசுகளை வழங்கி மகிழ்விப்பீர்கள். உடல் நலம் மற்றும் மனநலம் மிகச் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் இணைந்து வெளியூர் பயணம் சென்று மகிழும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

