ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!
Jana Nayagan 2nd Single Update : தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் 2ஆவது சிங்கிள் பாடல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.

தளபதி விஜய் ஜன நாயகன்
விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அஜித்தின் மாஸ் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம் என்று சொல்லப்படுகிறது.
ஜன நாயகன் இசை வெளியீடு
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இது அவரது கடைசி படம். இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஜன நாயகன் டப்பிங்
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான தளபதி கச்சேரி ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வைப் செய்யப்பட்டது. முழுக்க முழுக்க அரசியல் மற்றும் ஆக்ஷன் இரண்டும் கலந்த கலவையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
தளபதி விஜய் ஜன நாயகன்
ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படக்குழுவினர் ஜன நாயகன் தொடர்பாக ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஜன நாயகன் இசை வெளியீடு நடந்தால் சிக்கல் ஏற்படக் கூடும் என்பதற்காக ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தயாரிப்பு நிறுவனம் மலேசியாவில் நடத்துகிறது. வரும் 27ஆம் தேதி புக்கீட் ஜலீல் மைதானத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஜன நாயகன் அப்டேட்
இந்த நிலையில் தான் இப்போது 2ஆவது சிங்கிள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் ஜன நாயகன் படத்தின் 2ஆவது பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகும் என்று தெரிகிறது. ஏற்கனவே நேற்று வெளியாக இருந்த நிலையில் தான் ஏவிஎம் சரவணன் மறைவைத் தொடர்ந்து ஜனநாயகன் அப்டேட் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகையால் அப்டேட் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.