இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், , திமுக, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:30 PM (IST) Jul 07
இந்திய நிறுவனம் அனந்த் டெக்னாலஜிஸ் IN-SPACe ஒப்புதலுடன் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையைத் தொடங்குகிறது. ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்டு, உள்நாட்டு GEO செயற்கைக்கோள்கள் மூலம் நாடு முழுவதும் இணைய வசதியை வழங்கும்.
11:20 PM (IST) Jul 07
UGC NET ஜூன் 2025 தற்காலிக விடைக்குறிப்பு வெளியானது. ஜூலை 8, 2025 வரை ugcnet.nta.ac.in இல் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம். கட்டணங்கள் மற்றும் செயல்முறை விவரங்கள்.
11:14 PM (IST) Jul 07
ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ₹35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 5, 2025க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அறியவும்.
11:06 PM (IST) Jul 07
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 337 டிரேட், டிப்ளமோ, பட்டதாரி அப்ரண்டிஸ் காலியிடங்கள். தேர்வு இல்லை, தகுதி அடிப்படையில் தேர்வு. ஜூலை 21, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
10:08 PM (IST) Jul 07
தரவு பகுப்பாய்வு மற்றும் நிதி நிறுவனங்களுடனான நெருக்கமான தொடர்புகளைப் பயன்படுத்தி, அதிக செலவு செய்யும் ஆனால் உண்மையான வருமானத்தை மறைக்கக்கூடிய நபர்களைக் கண்டறிய வருமான வரித் துறை முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
09:59 PM (IST) Jul 07
அமேசான் பிரைம் டே 2025 விற்பனையில் ஐபோன் 15-ல் மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். ICICI மற்றும் SBI கார்டுகளில் பணம் செலுத்தினால் கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
09:58 PM (IST) Jul 07
Simbu Own Theatre List : சினிமா பிரபலங்களுக்கு நடிப்பு மட்டுமின்றி அவர்களுக்கு தனியாக வேறு பிஸினஸ் கூட இருக்கும். அப்படி சிம்புவிற்கு சொந்தமாக பல தியேட்டர்கள் இருக்கிறதாம். அதைப் பற்றி பார்க்கலாம்.
09:46 PM (IST) Jul 07
சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் புதிய தொழில் வாய்ப்பு மையங்களாக உருவெடுத்து வருகின்றன.
09:08 PM (IST) Jul 07
08:36 PM (IST) Jul 07
vishnu vishal in ratsasan 2 suspense thriller : அதிரடியான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக வெளியாகி, ரசிகர்களை பிரமிக்க வைத்த 'ராட்சசன்' திரைப்படத்தின் தொடர்ச்சி படத்திற்கு உறுதி கிடைத்துள்ளது.
08:16 PM (IST) Jul 07
தென்னாப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 367 ரன்கள் அடிதது டிக்ளேர் செய்தார். லாராவின் சாதனைக்கு 33 ரன்களே தேவைப்பட நிலையில் டிக்ளேர் செய்து அனவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
08:12 PM (IST) Jul 07
simbu learns dance : நடிகர் சிம்பு நயன்தாராவுக்கு தங்கையாக நடித்த நடிகையிடம், பரதநாட்டியம் கற்றுக்கொண்ட தகவல் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது.
07:51 PM (IST) Jul 07
மாருதி சுசூகி ஆல்டோ K10 காரில் அதிரடி தள்ளுபடி! பெட்ரோல், CNG மற்றும் ஆட்டோமேட்டிக் வகைகளிலும் இந்த சலுகை. 6 ஏர்பேக்குகள், சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த விலையுடன், இது நடுத்தர குடும்பங்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.
07:14 PM (IST) Jul 07
தந்தை, சகோதரர் மறைவு சகோதரிக்கு புற்றுநோய் என மனதில் வலியுடன் விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார் ஆகாஷ் தீப். அவரது பயணம் மற்றவர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.
07:07 PM (IST) Jul 07
Oho Enthan Baby movie in Tamil : விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நடிப்பில் வெளியாக இருக்கும் ஓஹோ எந்தன் பேபி படத்தை பாலிவுட் நடிகர் அமீர்கான் பாராட்டி பேசியுள்ளார்.
06:57 PM (IST) Jul 07
தினமும் இரவு தூங்கும் முன் இவற்றில் ஒன்றை முகத்தில் தடவுங்கள். காலையில் உங்களது முகம் நிச்சயம் பளபளப்பாக இருக்கும்.
06:33 PM (IST) Jul 07
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெற 5 முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
06:06 PM (IST) Jul 07
மகேந்திர சிங் தோனி தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது சிறப்பு நாளில், இந்தியாவில் எம்.எஸ். தோனி வைத்திருக்கும் டாப் 5 கார்களைப் பார்ப்போம்.
05:50 PM (IST) Jul 07
சிக்கனைத் தோலுடன் சாப்பிடுவது நல்லதா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:28 PM (IST) Jul 07
நெல்லின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, மனித சமூகத்தில் அதன் தாக்கம், எதிர்கால சவால்கள் குறித்து இந்த ஆய்வு விளக்குகிறது. ஆசிய அரிசியின் தோற்றம், கலப்பு ரகங்கள் எவ்வாறு உருவாகின, நெல் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஆகியவற்றை இந்த ஆய்வு ஆராய்கிறது.
04:32 PM (IST) Jul 07
பெற்றோர் குழந்தைகள் முன்பு அழுவது சரியான அணுகுமுறையா? இதனை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
04:30 PM (IST) Jul 07
வயிற்றில் தொப்பை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களாக சொல்லப்படும் 4 விஷயங்களை தவிர்ப்பதால், மிக எளிதில் தொப்பையை குறைத்து, தட்டையான வயிற்றுடன் ஆரோக்கியத்தையும், அழகையும் பெற முடியும். என்ன அந்த 4 விஷயம்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
04:11 PM (IST) Jul 07
நடிகர் மன்சூர் அலிகான், சமஸ்கிருதத்தில் ஒரு படம் எடுக்க உள்ளதாகவும், அதற்கு முன்னோட்டமாக "அகம் பிரம்மாஸ்மி" ஆல்பம் பாடலை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
04:10 PM (IST) Jul 07
முடி உதிர்தல் பிரச்சனையை போக்க தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்க சிறந்த வழி எது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
04:02 PM (IST) Jul 07
பூமியின் காந்தப்புலத்திற்கும் வளிமண்டல ஆக்சிஜன் அளவிற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இணைப்பு, பூமியில் உயிர்கள் தோன்றிய விதம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த நமது புரிதலை மாற்றியமைக்கக்கூடும்.
04:01 PM (IST) Jul 07
இன்றைய அவசர காலத்தில் தலை முடியை அலசி, உலற வைத்து, தயாராவதற்கு பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் தலையில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை சட்டென போக்கி, செம லுக்கில் தயாராவதற்கு இந்த எளிமையான 5 வழிகளை செய்து பார்க்கலாம்.
03:56 PM (IST) Jul 07
இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக அடீடாஸ் இருக்கும் நிலையில், சுப்மன் கில் நைக் பிராண்ட் வெஸ்ட்டை அணிந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
03:45 PM (IST) Jul 07
ajith first car he bought revealed : பைக் மற்றும் கார் ரேஸரான அஜித் முதன் முதலில் வாங்கிய கார் எது, அந்த காரின் விலை என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
03:12 PM (IST) Jul 07
இன்ஃபோசிஸ் தினசரி 9 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்புகிறது. தொலைதூரப் பணியாளர்களைக் கண்காணிக்கும் புதிய அமைப்பின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது.
02:24 PM (IST) Jul 07
தமிழகத்தில் சில நாட்கள் பெய்த கனமழைக்குப் பிறகு தற்போது மழை ஓய்ந்து வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. ஜூலை 7, 8 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02:16 PM (IST) Jul 07
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவர் குறித்த சுவாரஸ்யமான சில உண்மைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.
02:05 PM (IST) Jul 07
துபாய் அரசு இந்தியர்களுக்கு ரூ.23 லட்சத்தில் வாழ்நாள் குடியிருப்பு வழங்கும் கோல்டன் வீசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதலீடு தேவையில்லை, குடும்பத்துடன் செல்லலாம்
02:02 PM (IST) Jul 07
சூப் செய்யும் போது தெரியாமல் சில தவறுகள் செய்து விடுவதால் சூப்பின் சுவை மாறி விடவோ அல்லது சொதப்பலாகவோ மாறி விடும். ஆனால் இந்த தவறுகளை செய்யாமல் தவிர்த்து, கவனமாக சூப் தயாரித்தால் ரெஸ்டாரண்ட் சுவையையே மிஞ்சும் அளவிற்கு சூப் சூப்பராக இருக்கும்.
01:27 PM (IST) Jul 07
ஜூலை 9 ஆம் தேதி தமிழகத்தில் 13 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறும். போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படலாம்.
01:22 PM (IST) Jul 07
ஆபீசில் சிறிது நேரம் வேலை செய்தால் கூட மிக அதிகமான, கடினமான வேலை செய்ததை போல் உடலிலும் மனதிலும் சோர்வு ஏற்படுவதாக உணர்பவர்களில் நீங்களும் என்றால் குறிப்பிட்ட 6 வழிகளை தினமும் பின்பற்றி வந்தாலே சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும்.
01:08 PM (IST) Jul 07
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், அடுத்து ஹீரோவாக நடிக்க உள்ள 'துரந்தர்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக, சாரா அர்ஜுன் ஹீரோயினாக நடிக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
01:05 PM (IST) Jul 07
01:02 PM (IST) Jul 07
12:56 PM (IST) Jul 07
வியர்வையால் சட்டையின் அக்குள் பகுதியில் படிந்திருக்கும் மஞ்சள் நிற கறையை நீக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
12:55 PM (IST) Jul 07
தினமும் வாக்கிங் செல்வது உடல்நலத்திற்கு நல்லது என்றாலும் ஒரே முறையில், ஒரே எண்ணிக்கையில் வாக்கிங் செல்வது என்பது அனைவருக்கும் பொருந்தாது. அதே சமயம் நம்முடைய உடல்நிலைக்கு ஏற்ப, சரியான முறையில் வாக்கிங் சென்றால் பல நோய்களை தடுக்க முடியும்.