அஜித் முதன் முதலில் வாங்கிய கார் எது தெரியுமா?
ajith first car he bought revealed : பைக் மற்றும் கார் ரேஸரான அஜித் முதன் முதலில் வாங்கிய கார் எது, அந்த காரின் விலை என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

அஜித் முதன் முதலில் வாங்கிய கார்
ajith first car he bought revealed : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் இப்போது கார் ரேஸ் தொடர்களில் பங்கேற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லீ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
கார் ரேஸ் மீது காதல் கொண்ட அஜித்
இதையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்களம் என 1990-களில் இவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க கோலிவுட்டில் அஜித்தின் செல்வாக்கும் படிப்படியாக அதிகரித்தது. 2000க்கு முன்னர் வரை பேமிலி மற்றும் காதல் கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த அஜித், 2000க்கு பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். அதில் தீனா, சிட்டிசன், பில்லா போன்ற படங்கள் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தன.
அஜித்தும் கார் ரேஸூம்
பின்னர் கோலிவுட்டில் அசைக்க முடியாத உயரத்தை தொட்ட அஜித், இன்றளவும் அதை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், கடைசியாக குட் பேட் அக்லீ படத்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். இந்தப் படம் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து சிம்ரன், த்ரிஷா, சுனில், பிரசன்னா, பிரியா பிரகாஷ் வாரியர், பிரபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ஜூன் தாஸ் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
அஜித் குட் பேட் அக்லீ
குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு இப்போது பிரேக்கில் இருக்கும் அஜித் கார் ரேஸில் பிஸியாக இருக்கும். இப்போது அஜித்தை அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக பார்க்க முடிகிறது.இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கு அஜித், தன் வீட்டில் பல சொகுசு கார்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார்.
இன்று கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை வாங்கி வைக்கும் அளவுக்கு செல்வ செழிப்போடு இருக்கும் அஜித், முதன்முதலில் வாங்கிய கார், மாருதி 800. அதுவும் சினிமாவில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவரால் அந்த காரை வாங்க முடிந்ததாம். அதன்படி கடந்த 1996-ம் ஆண்டு மைனர் மாப்பிள்ளை படத்தில் நடித்தபோது தான் அஜித்துக்கு கார் வாங்கும் அளவுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாம்.
அஜித்தின் புதிய படம் எப்போது
அந்த படத்துக்காக சம்பளம் வாங்கிய கையோடு தன்னுடைய முதல் காரை வாங்கி இருக்கிறார் அஜித். அந்த காரை பல ஆண்டுகளாக உபயோகித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அதை தன் நண்பனிடம் கொடுத்துவிட்டாராம். அந்த நண்பர், இன்று வரையிலும் அந்த காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறாராம். யார் கேட்டாலும் இது அஜித்தின் கார் என்று கெத்தாக சொல்லுவாராம்.