40 வயசு ஹீரோ ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும்... விக்ரமின் ரீல் மகள் சாரா அர்ஜுன்!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், அடுத்து ஹீரோவாக நடிக்க உள்ள 'துரந்தர்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக, சாரா அர்ஜுன் ஹீரோயினாக நடிக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

சாரா அர்ஜுன் - 'பிளாக் ஃப்ரைடே', 'காலோ', '
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தன்னுடைய, நடிப்பு பயணத்தை துவங்கியவர் சாரா அர்ஜுன். இவர் 'பிளாக் ஃப்ரைடே', 'காலோ', 'ரவுடி ரத்தோர்' மற்றும் பல படங்களில் நடித்துள்ள நடிகர் ராஜ் அர்ஜுனின் மகள் ஆவார். சாரா அர்ஜுன், 18 மாதக் குழந்தையாக இருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
404' என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார்
இதை தொடர்ந்து, ஹிந்தியில் 2011-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன '404' என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கியூட் நடிப்பார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தர் சாரா. இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஏ எல் விஜய், நடிகர் விக்ரமை ஹீரோவாக வைத்து இயக்கிய, 'தெய்வத்திருமகள்' திரைப்படத்தில் சாராவை தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சாரா
இதை தொடர்ந்து, ஹிந்தி, தமிழ், மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சாரா, 18 வயதை கடந்த பின்னர், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்ட துவங்கினார். அந்த வகையில் தற்போது தன்னை விட 20 வயது கூடுதலான 40 வயது ஹீரோ ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 'துரந்தர்' திரைப்படத்தில் சாரா அர்ஜுன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ரன்வீர் சிங்கின் 40வது பிறந்தநாள்
ரன்வீர் சிங்கின் 40வது பிறந்தநாளில் வெளியிடப்பட்ட 'துரந்தர்' படத்தின் டீஸரில், இருவரும் ரொமான்ஸ் செய்யும் விதத்தில் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் சாரா ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 1' மற்றும் 'பொன்னியின் செல்வன் 2'
தமிழில் கடைசியாக சாரா அர்ஜுன், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 1' மற்றும் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராய்யின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கொட்டேஷன் கேங் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாரா அர்ஜுன், தன்னுடைய 20 வயதில் 40 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பது தான், தென்னிந்திய திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.