MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சீண்டிய ராகவ்... போடா உன் வேலையே வேண்டாம்னு தூக்கி எறிந்த நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

சீண்டிய ராகவ்... போடா உன் வேலையே வேண்டாம்னு தூக்கி எறிந்த நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

அய்யனார் துணை சீரியலில் நிலாவிடம் அத்துமீறிய பேசிய ராகவ்விடம் தான் இந்த வேலையை விட்டு விலகுவதாக சொல்லி இருக்கிறார் நிலா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 04 2026, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், சேரன் கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அங்கு அனீஸ் உடன் சேர்ந்து சாப்பிடுகிறார். வழக்கம்போல் சந்தா, சேரனுக்கும் சேர்த்து வித விதமாக சமைத்து கொடுத்திருக்கிறார். அதன்பின்னர் சேரனிடம் பேசும் அனீஸ், உங்க தம்பி சோழனும், அவங்க மனைவி நிலாவும் வீட்டுக்கு வந்திருந்தது பற்று கூறுகிறார். அவர்கள் எதுக்காக அங்கு சென்றிருந்தார்கள் என்பது தெரியாத சேரன், எதுக்கு வந்தாங்க என கேட்க, அனீஸும் விஷயத்தை கூறுகிறார். சந்தாவை உங்களுக்கு பொண்ணு கேட்டு வந்தாங்க என கூறுகிறார் அனீஸ்.

25
நிலாவிடம் திமிர் காட்டும் ராகவ்
Image Credit : jiohotstar

நிலாவிடம் திமிர் காட்டும் ராகவ்

தற்போதைக்கு இங்கு சிம்பிளா கல்யாணத்தை முடிச்சிருவோம், அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம் என கூறுகிறார். மறுபுறம் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலாவை, ராகவ் தன்னுடைய அறைக்கு அழைக்கிறார். அவரிடம் நீங்க வெளியே வேற கம்பெனில வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கீங்களா என கேட்கிறார். இந்த இண்டஸ்ட்ரி ரொம்ப சின்னது. நீங்க எந்த கம்பெனிக்கு அப்ளை பண்ணாலும், அந்த விஷயம் எனக்கு தெரிஞ்சிரும் என சொல்லும் ராகவ், அது எப்படி வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகாம நீங்க வேற கம்பெனிக்கு போக முடியும் என கேட்கிறார்.

Related Articles

Related image1
நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
Related image2
சந்தாவை திருமணம் செய்ய மறுக்கும் சேரன்... நிலாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
35
வேலையில் இருந்து விலகிய நிலா
Image Credit : jiohotstar

வேலையில் இருந்து விலகிய நிலா

இதற்கு பதிலளிக்கும் நிலா, உங்களுக்கே என்ன பிரச்சனைனு தெரியும். நீங்க தான் பிரச்சனை. நீங்க ஒழுங்கா ஸ்டாஃப் கிட்ட நடந்துக்க மாட்டேங்குறீங்க, அதுனால தான் நான் வேற வேலையை தேட வேண்டிய நிலை வந்துச்சு என நிலா சொல்ல, இங்க இருந்து வெளிய போனா நான் உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் தரமாட்டேன் என கூறுகிறார் ராகவ். நீங்க இப்படியெல்லாம் பண்ணுவீங்கனு எனக்கு ஏற்கனவே தெரியும். எனக்கு திறமை இருக்கு, நான் வெளிய போய் பொளைச்சுக்குவேன் என சொல்லிவிட்டு, ஐடி கார்டை கழட்டி ராகவ் டேபிளில் தூக்கியெறிந்துவிட்டு செல்கிறார் நிலா.

45
வானதிக்காக காத்திருந்த பாண்டி
Image Credit : jiohotstar

வானதிக்காக காத்திருந்த பாண்டி

மறுபுறம் பாண்டியன் வானதியின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார். வானதி வெளியே வருவாளானு பார்த்துக்கிட்டே இருக்கிறார். வானதியின் அப்பா வெளியே கடைக்கு சென்றுவிட்டு வரும்போது பாண்டியன் வீட்டு வாசலில் நிற்பதை பார்க்கிறார். உள்ளே சென்று எதுக்காக அந்த பையன் இங்க வந்து நின்னுகிட்டு இருக்கான் என கேட்க, அப்போது தான் வானதிக்கு பாண்டி வெளியே நிற்கும் விஷயம் தெரிகிறது. ரொம்ப நேரம் காத்திருந்தும் வானதி வராததால் கிளம்பி செல்கிறார் பாண்டி. அதன்பின்னர் வானதி வெளியே வந்து பார்த்துவிட்டு ரூமுக்குள் தனியே சென்று ஃபீல் பண்ணுகிறார்.

55
நிலாவை சமாதானப்படுத்தும் சோழன்
Image Credit : jiohotstar

நிலாவை சமாதானப்படுத்தும் சோழன்

இதையடுத்து நிலாவை ஆபிஸில் சென்று அழைத்து வர சோழன் செல்கிறார். அவரிடம் அழுதுகொண்டே நிலா நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். அவரை சமாதானப்படுத்தும் சோழன், கவலைப்படாதீங்க, உங்களுக்கு இருக்குற திறமைக்கு வேற நல்ல கம்பெனில வேலை கிடைக்கும் என சொல்கிறார் சோழன். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன ஆனது? நிலாவுக்கு வேறு வேலை கிடைத்ததா? இல்லையா? சேரனின் கல்யாணப் பேச்சு என்ன ஆச்சு? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தலையில் அடித்து சத்தியம் செய்த தங்கமயில்! அப்பவும் நம்பாத சரவணன்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் ஷாக்கிங் Moments!
Recommended image2
விஜயாவுக்கு ரெய்டு விட்ட ஸ்ருதி... முடிவை மாற்றினாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
Recommended image3
கார்த்திக்கிற்கு 'மரண ஸ்கெட்ச்' போட்ட சந்திரகலா! போலீசில் சிக்கிய ரேவதி - கார்த்திகை தீபம் சீரியலில் அதிரடி திருப்பம்!
Related Stories
Recommended image1
நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
Recommended image2
சந்தாவை திருமணம் செய்ய மறுக்கும் சேரன்... நிலாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved