MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • தலையில் அடித்து சத்தியம் செய்த தங்கமயில்! அப்பவும் நம்பாத சரவணன்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் ஷாக்கிங் Moments!

தலையில் அடித்து சத்தியம் செய்த தங்கமயில்! அப்பவும் நம்பாத சரவணன்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் ஷாக்கிங் Moments!

Thangamayil Pregnancy Promise Scene :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 731ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்று சீன் பை சீன் காட்சியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Mar 04 2026, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Why Saravanan doesn't believe Thangamayil?
Image Credit : Jio Hot Star

Why Saravanan doesn't believe Thangamayil?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் காட்சிகளோடு பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 731ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக ஒவ்வொரு சீனாக பார்க்கலாம். இன்றைய எபிசோடானது மீனா மற்றும் செந்திலின் காட்சிகளோடு தொடங்குகிறது. அப்போது தங்கமயிலிடமிருந்து Phone Call வரவே கொஞ்சம் ஷாக்கான மீனாவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

210
Thangamayil fake promise scene
Image Credit : Jio Hot Star

Thangamayil fake promise scene

ஆனால், மீனா, ஷியாமளா அக்கா என்று தங்கமயிலின் நம்பரை Save பண்ணி வச்சிருக்கிறார். அதனால், மீனா அந்த நேர்த்தில் தப்பிக் கொண்டார். இல்லையென்றால் செந்திலிடம் வசமாக சிக்கியிருப்பார். தங்கமயில் மீனாவிற்கு போன் போட்டு ஒரு உதவி கேட்டார். அதாவது, தான் கர்ப்பமாக இருக்கும் உண்மையை சரவணன் மாமாவிடம் சொல்ல வேண்டும். அதற்கு நீ தான் உதவி செய்ய வேண்டும். மாமாவை அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு வர சொல்ல வேண்டும் என்றார்.

310
தங்கமயில் பொய் சத்தியம் செய்தது
Image Credit : Jio Hot Star

தங்கமயில் பொய் சத்தியம் செய்தது

சரி, ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க மீனா போராடும் நிலையில், சரவணனுக்கு போன் போட்டு மாமா, நான் உங்களிடம் தனியாக பேச வேண்டும். அதற்கு அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு வர முடியும் என்று கேட்க, என்னம்மா, செந்தில் மறுபடியும் ஏதேனும் பிரச்சனை செய்கிறானா என்று கேட்கவே, ஆமாம் மாமா, அதைப் பற்றி தான் பேச வேண்டும். அதனால், நான் தான் உங்களை வர சொன்னேன் என்ற உண்மையை பாண்டியன் மாமாவிடம் சொல்லாமல் மட்டும் நீங்கள் கோயிலுக்கு வாங்க என்றார்.

410
சரவணன் தங்கமயிலை நம்பாதது ஏன்?
Image Credit : Jio Hot Star

சரவணன் தங்கமயிலை நம்பாதது ஏன்?

சொன்னபடி தங்கமயில் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டு, சரவணனுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது சரவணன் வரவே, நான் சொல்லி தான் மீனா உங்களை இங்கு வர சொன்னாள் என்ர உண்மையை தங்கமயில் சொல்ல ஆரம்பித்தார். பிறகு என்னுடைய நம்பரை பிளாக் செய்து வைத்திருக்கீங்க. அதான் மீனாவிடம் சொல்லி உங்களுக்கு போன் போட சொன்னேன். அப்போ மீனாவும் உன் பக்கமா? மீனாவிடம் என்ன சொல்லி உங்களது பக்கம் இழுத்து வச்சிருக்கீங்க..

510
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய முழு எபிசோட்
Image Credit : Jio Hot Star

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய முழு எபிசோட்

உன்னிடம் எதுவும் பேச நான் விரும்பவில்லை. அப்படி இப்படி என்று பேச, நான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன். நீங்கள் கேட்க கூட வேண்டாம், இதை மட்டும் பாருங்கள் என்று Pregnancy Reportஐ கொடுத்தார். அதை கொஞ்சம் பில்டப் பண்ணி கொடுத்தார். அதை சரவணன் வாங்கவில்லை. என்ன விஷயம் என்று கேட்க, நான் பண்ணது எல்லாம் தப்பு தான். நான் அதை உணர்ந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இதை மட்டும் வாங்கி பாருங்கள்.

610
Pandian Stores 2 today full episode highlights
Image Credit : Jio Hot Star

Pandian Stores 2 today full episode highlights

நான் மாசமாக இருக்கிறேன் என்று சொல்லவே அதிர்ச்சியடைந்த சரவணன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். நீயெல்லாம் திருந்தவே மாட்டீயா, இப்போதுதான் பண்ண தப்பெல்லாம் உணர்ந்துவிட்டேன் என்று சொன்ன, அதுக்குள்ள இன்னொரு பொய்யா? ஏற்கனவே இதே மாதிரி ஒரு டிராமா பண்ணி தான் வீட்டுக்குள் வந்த, வேறு வழியில்லை என்று தெரிந்து மறுபடியும் பழைய டிராமாவை தூக்கிக் கொண்டு வந்துட்டீயா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

710
Thangamayi Sathiyam Scene
Image Credit : Jio Hot Star

Thangamayi Sathiyam Scene

அதற்கு தங்கமயிலோ இல்லை மாமா, இந்த முறை நான் நிஜமாகவே மாசமாக இருக்கிறேன். இந்த ரிப்போர்ட்டை வாங்கி பாருங்கள். சத்தியமாக, உங்கள் மீது சத்தியமாக நான் மாசமாக இருக்கிறேன். உடனே கையை தட்டிவிட்ட சரவணன், எப்படி கோயிலில் வைத்து பொய் சத்தியம் பண்ணிக்கிட்டு இருக்க, உன்னுடைய முகத்தை பார்க்க பிடிக்காமல் தான் நான் மாசக்கணக்கில் ஒதுங்கி இருக்கிறேன். அப்புறம் எப்படி மாசமாக இருக்கிறேன் என்று என்னிடம் வந்து சொல்லுற, ஓ இந்த கேனயன் கிட்ட எதை சொன்னாலும் நம்பிடுவான் என்று கதை கதையா வந்து சொல்லிக்கிட்டு இருக்கியா என்றார்.

810
Saravanan Thangamayil Conflict
Image Credit : Jio Hot Star

Saravanan Thangamayil Conflict

இதற்கு கதை இல்லை மாமா இது உண்மை. சென்ற முறை டாக்டரை பார்க்காமல் அவசரப்பட்டு சொல்லிவிட்டேன். ஆனால், இந்த முறை அப்படியில்லை டாக்டரை பார்த்து உறுதி பண்ணிட்டேன். அதான் இந்த ரிப்போர்ட் என்றார். இந்த ரிப்போர்ட்டை வாங்கி பாருங்கள். சாமி மீது சத்தியமாக நான் மாசமாக இருக்கிறேன். நானே உன் பக்கத்தில் வரவே இல்லை. அப்புறம் எப்படி மாசமாக இருக்கிறேன் என்று என்னிடம் வந்து சொல்லிக்கிட்டு இருக்க என்று கேட்க, இருங்க நான் ரிப்போர்ட்டை எடுத்து காட்டுறேன் என்று காட்டவே, மாமா நாம் அப்பா அம்மாவாக போகிறோம். 

910
Pandian Stores 2 Latest Twist March 2026
Image Credit : Jio Hot Star

Pandian Stores 2 Latest Twist March 2026

உங்களது குழந்தை என்னுடைய வயிற்றில் என்று சொல்ல, ஏய், என் குழந்தையா? இது என் குழந்தை கிடையாது? இது வேற எவனோட குழந்தையோ என்று சொல்லவே தங்கமயில் அதிர்ச்சி அடைந்தார். இது யாருடைய குழந்தை, சும்மா வந்து நான் மாசமாக இருக்கிறேன் என்று சொன்னால் நான் அப்படியே உருகிவிட வேண்டுமா? இதுக்கு அப்புறம் நான் உன்னை நம்பவே மாட்டேன். நீ மாசமாக இருக்கிறேன் என்று சொன்னது எல்லாமே பொய். ஒருவேளை நீ மாசமாக இருந்தாலும் அந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீ திரும்ப திரும்ப எங்கிட்ட வந்து பேசுறது, ஏதாவது ஒரு காரணம் சொல்லுவது என்று எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. நீ தான் வர சொல்லியிருக்கிற என்று தெரிந்திருந்தால் நான் சத்தியமாக வந்திருக்கமாட்டேன் என்றார்.

1010
Pandian Stores 2 Serial Today 731 Episode Highlights in Tamil
Image Credit : Jio Hot Star

Pandian Stores 2 Serial Today 731 Episode Highlights in Tamil

தயவு செய்து இனிமேல் நீ என்னை பார்க்க வர வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி, நாளை என்ன நடக்கும், அடுத்து பாக்கியத்தின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? சரவணன் மற்றும் மீனாவிற்கு இடையில் ஏதேனும் பிரச்சனை வருமா அல்லது இந்த விஷயம் பற்றி செந்திலுக்கு தெரிய வந்தால் அவரது ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் உள்ளிட்ட பல சுவாரஸ்யங்களுக்காக காத்திருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்து எபிசோடுகளை பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜயாவுக்கு ரெய்டு விட்ட ஸ்ருதி... முடிவை மாற்றினாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
Recommended image2
கார்த்திக்கிற்கு 'மரண ஸ்கெட்ச்' போட்ட சந்திரகலா! போலீசில் சிக்கிய ரேவதி - கார்த்திகை தீபம் சீரியலில் அதிரடி திருப்பம்!
Recommended image3
கார்த்திகை தீபம் பிளண்டர் மிஸ்டேக்! புதையல் பெட்டியில் கல்லை மாற்றியது எப்படி? சந்திரகலா டிராமாவில் இவ்வளவு லாஜிக் மீறலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved