MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தோனிக்கு கிரிக்கெட்டை விட 'இந்த' கேம் தான் பிடிக்குமாம்! இதுவரை யாரும் சொல்லாத விஷயம்!

தோனிக்கு கிரிக்கெட்டை விட 'இந்த' கேம் தான் பிடிக்குமாம்! இதுவரை யாரும் சொல்லாத விஷயம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவர் குறித்த சுவாரஸ்யமான சில உண்மைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 07 2025, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Interesting Facts About MS Dhoni
Image Credit : social; media

Interesting Facts About MS Dhoni

கிரிக்கெட் உலகில் 'கூல் கேப்டன்' என்று அழைக்கப்படும் தல தோனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன், ஐபிஎல்லில் அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என தோனியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கேப்டன்சியில் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் தோனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தோனியின் சாதனை
Image Credit : Instagram

தோனியின் சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் (195) செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி வைத்துள்ளார். தனது 44 வயதிலும் ஐபிஎல்லில் மின்னல் வேகத்தில் அவர் ஸ்டெம்பிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடைசி ஓவர்களில் ஆட்டத்தை வென்று கொடுக்கும் பினிஷிங் ரோலை தோனி மாதிரி இதுவரை எந்த வீரரும் செய்யவில்லை. மேலும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் 183 ரன்கள் குவித்து, ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

ரயில்வே டிக்கெட் பரிசோதகர் தோனி

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன. கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்பு தோனி இந்திய ரயில்வேயில் வேலை பார்த்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? தோனி கரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். அங்கு இருந்து தான் அவரது வாழ்க்கை மாறி உச்சத்துக்கு கொண்டு சென்றது.

34
தோனிக்கு பிடித்த விளையாட்டு
Image Credit : Instagram

தோனிக்கு பிடித்த விளையாட்டு

கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பு தோனிக்கு கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் பருவத்தில் எப்போதும் கால்பந்து விளையாடிய தோனி கால்பந்து கோல் கீப்பராக சிறந்து விளங்கியுள்ளார். கால்பந்தில் பெரிய வீரராக வலம் வர வேண்டும் என நினைத்துள்ளார். ஆனால் அவரது பயிற்சியாளரின் தூண்டுதலின் பேரில் தோனி கிரிக்கெட் பக்கம் வந்து இப்போது கிரிக்கெட்டுக்கே பிராண்ட்டாக மாறி விட்டார்.

ராணுவத்தில் உயர் பதவி

தோனிக்கு 2011 ஆம் ஆண்டு லெப்டினென்ட் கர்னல் என்ற ராணுவத்தின் உயரிய அந்தஸ்து தோனிக்கு வழங்கப்பட்டது. கபில்தேவுக்குப் பிறகு இந்த பெருமையை பெற்ற இரண்டாவது கிரிக்கெட் வீரர் தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி தனது ராஞ்சி பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது சொந்த பண்ணையில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்.

44
தோனியின் வாழ்க்கை படம்
Image Credit : Instagram

தோனியின் வாழ்க்கை படம்

தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு "எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி" என்ற இந்தி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தோனியின் கிரிக்கெட் பயணம், போராட்டங்கள், வெற்றிகள், மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அம்சங்களை தெளிவாக எடுத்துரைத்து பெரும் வெற்றி பெற்றது. 

தோனி பைக்குகள் மீது அதீத பிரியம் கொண்டவர். வின்டேஜ் பைக்குகள் முதல் இப்போதைய புது மாடல்கள் பைக் வரை தோனி வாங்கி வைத்துள்ளார். பைக்குகளை நிறுத்துவதற்கு தோனி புதிய கேரேஜ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எம். எஸ். தோனி
எம். எஸ். தோனி சி.எஸ்.கே
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Related Stories
Recommended image1
பிரைவேட் ஜெட், 5 சொகுசு பங்களா! ராஜாவாக வாழும் 'கூல் கேப்டன்'! சொத்து மதிப்பில் அம்பானிக்கு டப் கொடுக்கும் தோனி!
Recommended image2
மனைவியிடம் சொல்லாதீங்க! ரகசியக் காதலியின் பெயரைச் சொன்ன தோனி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved