- Home
- Cinema
- சிம்புவுக்கு மட்டும் சொந்தமாக இத்தனை தியேட்டர் இருக்கா? இதுலயே கோடி கோடியாய் வருமானம் வருதா?
சிம்புவுக்கு மட்டும் சொந்தமாக இத்தனை தியேட்டர் இருக்கா? இதுலயே கோடி கோடியாய் வருமானம் வருதா?
Simbu Own Theatre List : சினிமா பிரபலங்களுக்கு நடிப்பு மட்டுமின்றி அவர்களுக்கு தனியாக வேறு பிஸினஸ் கூட இருக்கும். அப்படி சிம்புவிற்கு சொந்தமாக பல தியேட்டர்கள் இருக்கிறதாம். அதைப் பற்றி பார்க்கலாம்.

சிம்புவிற்கு இருக்கும் திரையரங்குகள்
Simbu Own Theatre List : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. சினிமா பின்னணியை வைத்து நடிகரானவர்களில் சிம்புவும் ஒருவர். குழந்தைப் பருவம் முதலே சினிமாவில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சிறப்பாக டான்ஸூம் ஆடுவார். ஏராளமான பாடல்களும் பாடியிருக்கிறார். குழந்தைப் பருவத்தில் இவர் தனது அப்பாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அப்பாவைப் போன்று அடுக்குமொழி பேசவும் செய்வார். கடந்த 1984 ஆம் ஆண்டு திரைக்கு வந்த உறவைக் காத்த கிளி என்ற படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
சிம்புவிற்கு சொந்தமான திரையரங்குகள்
இந்தப் படத்தைத் தொடர்ந்து மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, தாய் தங்கை பாசம் என்று பல படங்களில் நடித்துள்ளார். இப்படி ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படம் மூலமாக ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் அவரது அப்பா இயக்கி தயாரித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு பிறகு தூம், அலை, கோயில், குத்து, மன்மதன், விண்ணைதாண்டி வருவாயா, ஒஸ்தி, போடா போடி, வாலு என்று பல படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு சில படங்களை ஹிட்டும் கொடுத்துள்ளார். ஆனால், பெரியளவிற்கு இல்லையென்றாலும் இந்தப் படங்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.
சிம்பு நடித்த படங்கள்
சமீப காலமாக சிம்பு நடிப்பில் வந்த எந்தப் படமும் ஹிட் படமாக அமையவில்லை. ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. சமீபத்தில் திரைக்கு வந்த தக் லைஃப் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இப்போது சிம்பு தனது 49ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இவர் பார்க்கிங் படத்தை இயக்கி பிரபலமானார்.
சிம்பு நிகர சொத்து மதிப்பு
இந்த நிலையில் தான் சிம்புவிற்கு சினிமா உலகைத் தாண்டி சொந்தமாக தியேட்டரும் இருக்கிறதாம். இதன் மூலமாகவும் சிம்புவிற்கு வருமானமும் வருவதாக சொல்லப்படுகிறது. சிம்பு Atman Cine Arts என்ற தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலமாக தனது 50ஆவது படமான எஸ்டிஆர்50 படத்தை தயாரிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் தான் சிம்புவிற்கு சொந்தமாக திரையரங்குகள் இருக்கிறதாம். அதுவும் வேலூரில் இருக்கிறதாம். சென்னையில் இருக்கிறதா என்றால் அது இல்லை.
சிம்புவுக்கு மட்டும் சொந்தமாக இத்தனை தியேட்டர் இருக்கா
அப்படி வேலூரில் எங்க இருக்கிறது, என்ன தியேட்டர் என்று பார்த்தால் குறள் தியேட்டர் – சிலம்பு தியேட்டர் என்று ஒரு திரையரங்கு இருக்கிறதாம். இந்த தியேட்டரில் போதுமான வசதிகள் இல்லை என்றும், மிகவும் பழமையான திரையரங்கு என்றும் கூறப்படுகிறது. இந்த திரையரங்கானது வேலூர் கோடைக்கு பின்புறம் பெங்களூரு ரோட்டில் அமைந்துள்ளதாம். இனி வரும் காலங்களில் இந்த திரையரங்கு புதுப்பிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி சிம்புவின் நிகர சொத்து மதிப்பு பற்றி பார்க்கையில் அவருடைய நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.100 கோடியாம்.இந்த 100 கோடியும், அவர் நடிகர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் ஆகியவற்றின் மூலமாக சம்பாதித்துள்ளாராம். இப்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். இனி வரும் காலங்களில் இந்த நிறுவனம் மூலமாக பல படங்களை தயாரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.