Glowing Skin : முகம் பளபளக்க இரவில் தூங்கும் முன் இதை மட்டும் தடவுங்க!!
தினமும் இரவு தூங்கும் முன் இவற்றில் ஒன்றை முகத்தில் தடவுங்கள். காலையில் உங்களது முகம் நிச்சயம் பளபளப்பாக இருக்கும்.

முகம் பளபளப்பாக இருக்க
அழகாக இருக்க யாரு தான் விரும்ப மாட்டார்கள்? அதுவும் குறிப்பாக பெண்கள் தங்களது முகம் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். இதற்காக அவர்கள் பலவிதமான பொருட்களை வாங்கி முகத்தில் பயன்படுத்துவார்கள். ஆனால், அவற்றிற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இயற்கை முறையில் முகத்தை அழகாக்கலாம் தெரியுமா? ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவு தூங்கும் முன் நீங்கள் உங்களது முகத்தில் தடவி வந்தால் காலையில் உங்களது முகம் பொலிவுடன் இருக்கும். அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.
பாதாம் எண்ணெய்:
பொதுவாக முடி வளர்ச்சிக்கு தான் பாதாம் எண்ணெயை பயன்படுத்துவார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் முகத்தை அழகாக்கவும் இதை பயன்படுத்தலாம். இதற்கு தினமும் இரவு தூங்கு முன் சில துளிகள் பாதாம் எண்ணெயை உங்களது முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து வந்தால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும், முகம் மென்மையாகவும், தெளிவாகவும் மாறும்.
கற்றாழை ஜெல் :
கற்றாழை ஜெல் தலைமுடிக்கு மட்டுமல்ல, முகத்தின் அழகை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம். தினமும் இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல் முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து பிறகு தூங்க வேண்டும். காலையில் தூங்கி எழுந்து பார்க்கும் போது உங்களது முகம் பளபளப்பாக இருக்கும். தொடர்ந்து இதை செய்து வந்தால் நிச்சயமாக நல்ல பலன்கள் காண்பீர்கள். ஆனால் இதற்கு நீங்கள் சந்தையில் கிடைக்கும் கற்றாழை ஜெல்லுக்கு பதிலாக, வீட்டில் இருக்கும் புதிய கற்றாழை ஜெல்லை தான் பயன்படுத்த வேண்டும்.
தயிர் ;
தயிர் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மற்ற உதவும். இதில் இருக்கும் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். தினமும் இரவு தூங்கும் முன் சிறிதளவு தயிரை முகத்தில் தடவி மெதுவாக மாசாஜ் செய்து பிறகு முகத்தை கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களது முகம் பொலிவாக மாறும்.
பால் :
பச்சைப் பால் முகத்திற்கு டோனராக பயன்படுத்தலாம். இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்குவது மட்டுமல்லாமல், சருமத்தின் பழுப்பு நிறத்தையும் குறைக்கும். இரவு தூங்கும் முன் ஒரு பருத்தி உருண்டை உதவியுடன் பச்சை பாலை முகத்தில் தடவி வந்தால் சருமம் சுத்தமாகவும், பிரகாசமாகவும் மாறும்.
ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் :
ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் உங்களது முகத்தை பளபளப்பாக மாற்ற உதவும். மேலும் சருமத்தை ஈரப்பதமாகும். ரோஸ் வாட்டர் இனிமையான பண்புகளை கொண்டுள்ளன சந்தனம் சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவும். எனவே இவை இரண்டையும் கொண்டு ஃபேஸ் பேக்காக முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களது முகம் இயற்கையாகவே பளபளப்பாக மாறிவிடும்.