ஓஹோ எந்தன் பேபி படத்தை பாராட்டிய தள்ளிய பிரபல பாலிவுட் நடிகர் அமிர்கான்!
Oho Enthan Baby movie in Tamil : விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நடிப்பில் வெளியாக இருக்கும் ஓஹோ எந்தன் பேபி படத்தை பாலிவுட் நடிகர் அமீர்கான் பாராட்டி பேசியுள்ளார்.

ஓஹோ எந்தன் பேபி ரிலீஸ் தேதி
Oho Enthan Baby movie in Tamil : இயக்குநர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா ஹீரோவாக அறிமுகமாகும் படம் தான் ஓஹோ எந்தன் பேபி. இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வரும் 11 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. முழுக்க முழுக்க ரொமாண்டிக் எண்டர்டெய்னர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
ஓஹோ எந்தன் பேபி
இந்தப். படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பேசிய மிதிலா பால்கர் கூறுகையில், "'ஓஹோ எந்தன் பேபி' ரொமாண்டிக் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம். நிச்சயம் நீங்கள் அனைவரும் உங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்ள முடியும். நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூலை 11 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்".
நடிகை அஞ்சு குரியன், "'ஓஹோ எந்தன் பேபி' ரோம்-காம் திரைப்படம். இந்த படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறோம். நிச்சயம் நீங்கள் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்".
நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்
கோவிட் காலகட்டத்திற்கு பிறகு அனைவருக்கும் ஒரு விதமான மன அழுத்தம் இருக்கிறது. அதை எல்லாம் போக்கி உங்களை 'ஓஹோ எந்தன் பேபி' ஜாலியாக சிரிக்க வைக்கும், கொண்டாட வைக்கும். படம் முடித்து நீங்கள் தியேட்டர் விட்டு வெளியே போகும்போது நிச்சயம் உங்கள் முகத்தில் புன்னகை இருக்கும்".
நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், " புதுமுக இயக்குநர்களுடன் தான் நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். ஏனெனில், அவர்களிடம் தான் ஒரு மேஜிக் இருக்கும். அந்த மேஜிக் இந்த படத்தில் இருக்கக்கூடிய அனைத்து புது முக நடிகர்களிடமும் இருக்கிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. அது இருந்தால் அடுத்தடுத்து நிறைய புது முகங்களுக்கு நான் வாய்ப்பு கொடுப்பேன். நான் புதுமுகமாக திரையுலகில் வந்த பொழுது எனக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இன்று கடவுள் புண்ணியத்தில் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கும் இடத்திற்கு வளர்ந்திருக்கிறேன்.
ராட்சன் 2
உங்களுக்கு ஒரு அப்டேட்! என்னுடைய அடுத்த படம் 'கட்டாகுஸ்தி2'. 'ராட்சன்2' படமும் அடுத்த வருடம் என்னுடைய தயாரிப்பில் நிச்சயம் நடக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அமிர்கான் பாராட்டிவிட்டு கண்கலங்கினார். என் தம்பி ரொம்பவே லக்கி. என் தம்பி அறிமுகமாகும் படத்தில் நானும் ஹீரோவாகவே நடித்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.