vishnu vishal in ratsasan 2 suspense thriller : அதிரடியான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக வெளியாகி, ரசிகர்களை பிரமிக்க வைத்த 'ராட்சசன்' திரைப்படத்தின் தொடர்ச்சி படத்திற்கு உறுதி கிடைத்துள்ளது.

vishnu vishal in ratsasan 2 suspense thriller : தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால். இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இடம் பொருள் ஏவல் என்று பல படங்களில் நடித்தார்.

ஆனால், விஷ்ணு விஷாலுக்கு எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு, கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், லால் சலாம், எஃப் ஐ ஆர், ஆரண்யா என்று பல படங்களில் நடித்துள்ளார்,. இதில், ராட்சசன் படம் மட்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது ராட்சன் படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருக்கிறது. தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ஓஹோ எந்தன் பேபி படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்தப் படம் வரும் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தான் விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் படத்தின் 2ஆம் பாகம் வெளியாக இருக்கிறது. தன்னை உலகளாவிய ரீதியில் பாராட்டை வைத்த இயக்குநர் ராம்குமாருடன் மீண்டும் இணைந்து 'ராட்சசன் 2' திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதை நோக்கி முன்னேறி வருகிறது. 'ராட்சசன்' படத்தின் வெற்றியை மீண்டும் பன்மடங்கு உயர்த்தும் நோக்கத்துடன் உருவாகும் இந்தப் படத்தில், திகில், திரில் மற்றும் சஸ்பென்ஸ் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.