- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு கைமாறிய சூப்பர் ஹிட் சீரியல் - இதென்ன புது ட்விஸ்டா இருக்கு..!
சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு கைமாறிய சூப்பர் ஹிட் சீரியல் - இதென்ன புது ட்விஸ்டா இருக்கு..!
சன் டிவியில் சக்கைப் போடு போட்ட சீரியல் ஒன்றை தற்போது விஜய் டிவி கைப்பற்றி உள்ளது. அந்த சீரியல் வருகிற மார்ச் 16ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Sun TV Serial Shifted to Vijay TV
தமிழ் நாட்டில் சீரியல்கள் என்றாலே அது சன் டிவியும், விஜய் டிவியும் தான். இதில் சன் டிவி தான் சீரியல்களின் ராஜா என்றே சொல்லலாம். அதில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதற்கு போட்டியாக வந்த விஜய் டிவி, படிப்படியாக முன்னேறி, தற்போது சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் வகையில் புத்தம் புது கதைக்களத்துடன் சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 16ந் தேதி முதல் விஜய் டிவியில் புது சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. அந்த சீரியலை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முடிவுக்கு வரும் சீரியல்
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்கிற மெகா ஹிட் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் நடிப்பில் புதிதாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் மகளே என் மருமகளே. இந்த சீரியலில் நவீன், அவினாஷ் உள்பட ஏராளமானோர் நடித்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதன் கிளைமாக்ஸ் எபிசோடு தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வருகிற மார்ச் 14-ந் தேதி உடன் இந்த சீரியல் முடிவடைகிறது. இந்த சீரியலுக்கு பதிலாக மாலை 6 மணிக்கு ஒரு புது சீரியல் களமிறங்க உள்ளது.
நாகினி ரிட்டர்ன்ஸ்
விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலின் பெயர் நாகினி. இது எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் தோன்றுகிறதா... இது சன் டிவியில் சக்கைப்போடு போட்ட நாகினி சீரியலின் புது சீசன். இதுவரை சன் டிவி தான் நாகினி என்கிற பெயரில் இந்த டப்பிங் சீரியலை ஒளிபரப்பி வந்தது. அந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன்பின்னர் நாகினி சீரியலின் அடுத்தடுத்த சீசன்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில், முதன்முறையாக நாகினி சீரியல் தற்போது விஜய் டிவிக்கு வந்துள்ளது.
விஜய் டிவியில் நாகின்
வருகிற மார்ச் 16-ந் தேதி முதல் நாகின் சீரியலின் 7வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிறச் செய்த இந்த சீரியல், விஜய் டிவிக்கும் டிஆர்பியில் பூஸ்ட் ஆக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஜய் டிவியிலும் இது ஒரு டப்பிங் சீரியலாகவே ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் இந்தியிலும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

