இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், நடிகர் ஸ்ரீகாந்த், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:51 PM (IST) Jun 25
TNPL 2025 : Trichy vs Madurai : டிஎன்பிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
11:09 PM (IST) Jun 25
கூகிள் டீப்மைண்ட் ஜெமினி ரோபோடிக்ஸ் ஆன்-டிவைஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையம் இல்லாமல் ரோபோக்களில் இயங்கும் AI மாதிரி, வேகமான, தனிப்பட்ட செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.
11:00 PM (IST) Jun 25
Maargan First 6 Minutes Video Released : விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் மார்கன் படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் இடம் பெற்ற முதல் 6 நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
10:54 PM (IST) Jun 25
இந்திய விமான நிலையங்களில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. ஓடுபாதையில் மங்கிய குறுக்கு கோடுகள், பயனற்ற பயணிகள் சாதனங்கள், விமானப் பராமரிப்பில் குறைபாடுகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன.
10:44 PM (IST) Jun 25
இந்தியாவின் மாத டேட்டா பயன்பாடு 2030-க்குள் 62 GB/பயனர் ஆக உயரும். 5G வளர்ச்சி 980 மில்லியன் பயனர்களை உருவாக்கி, கிட்டத்தட்ட முழு கவரேஜை ஏற்படுத்தும்.
10:33 PM (IST) Jun 25
USC மற்றும் UCLA உருவாக்கிய கம்பியில்லா, AI-இயங்கும் தண்டுவட உள்வைப்பு கருவி, ஓபியாய்டுகள் இல்லாமல் நிகழ்நேர, தனிப்பயனாக்கப்பட்ட வலி நிவாரணம் அளிக்கிறது. நாள்பட்ட வலி மேலாண்மையில் ஒரு புரட்சி.
10:26 PM (IST) Jun 25
வாட்ஸ்அப் இப்போது புதிய பல சாதன அம்சம் மூலம் இரண்டு போன்களில் ஒரு கணக்கை பயன்படுத்த அனுமதிக்கிறது. உங்கள் சாதனங்களை End-to-End Encryption மூலம் பாதுகாப்பாக இணைப்பது எப்படி என்பதை அறிக.
09:53 PM (IST) Jun 25
Dhanush Should Get National Award For Kuberaa : தனுஷிற்கு குபேரா படத்திற்காக தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:11 PM (IST) Jun 25
ஜூன் 26 முதல் ஜூலை 3 வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08:58 PM (IST) Jun 25
குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வாஸ்து சாஸ்திரப்படி படிக்கும் அறையை அமைப்பது அவசியம். வடகிழக்கு திசையில் அமைந்த படிக்கும் அறை, சூரிய ஒளி நுழையும் வகையில் ஜன்னல்கள், சரியான அமர்வு திசை ஆகியவை மாணவர்களின் அறிவுத்திறனை் மேம்படுத்தும்.
08:24 PM (IST) Jun 25
SIX MINING : நிதி சந்தை மற்றும் முதலீடுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதோடு வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. SEBI, Reserve Bank போன்றவற்றின் மூலமாக சந்தை சூழலானது சாதகமாக மாறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
08:23 PM (IST) Jun 25
08:02 PM (IST) Jun 25
07:35 PM (IST) Jun 25
சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் 4 விண்கலத்தில் விமானியாக விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளார். விண்வெளிப் பயணத்திற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானின் 'யூஹி சலா சல் ராஹி' பாடலைக் கேட்டுள்ளார்.
07:28 PM (IST) Jun 25
வீட்டில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் பெரும்பாலும் உரிமம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இது சட்டவிரோதமானது மற்றும் தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின் கண்காணிப்புக்கு உள்ளாகும்.
07:08 PM (IST) Jun 25
கால்சியம் குறைபாடு இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் மற்றும் அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:46 PM (IST) Jun 25
06:26 PM (IST) Jun 25
Chikitu Musical Video Released : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான சிக்கிட்டு பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
06:17 PM (IST) Jun 25
போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த மற்றொரு நடிகரான கிருஷ்ணாவை தன்னிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
06:12 PM (IST) Jun 25
05:49 PM (IST) Jun 25
தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், மாம்பழ கூழ் மீதான 12% ஜி.எஸ்.டி. வரியை 5% ஆக குறைக்கவும், மத்திய அரசு பாதி விலையை ஈடுகட்டவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
05:45 PM (IST) Jun 25
இன்ஸ்டாகிராமை திறந்தாலே கூமாப்பட்டி என்கிற கிராமத்தை பற்றிய ரீல்ஸ்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அந்த கிராமம் எங்கு உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.
05:44 PM (IST) Jun 25
40 வயதிலும் முகத்தில் சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
05:34 PM (IST) Jun 25
05:24 PM (IST) Jun 25
Pandian Stores 2 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 515ஆவது எபிசோடில் ரூ.10 லட்சம் பணத்திற்கு செந்தில் எங்கு அலைந்து திரிந்தாலும் கிடைக்கவில்லை.
04:55 PM (IST) Jun 25
Coolie Telugu Rights : ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் இந்த படத்தின் தெலுங்கு உரிமையை வேதேஷ்வரா மூவிஸ் பேனர் நிறுவனம் ரூ.46 கோடிக்கும் அதிகமாக கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
04:48 PM (IST) Jun 25
உலகின் சில ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் ஒன்றான ரஷ்யாவின் Su-57 ரக போர் விமானத்தை இந்தியா வாங்கக்கூடும். அமெரிக்காவின் F-35 விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டாத நிலையில், ரஷ்யாவின் Su-57 விமானங்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது.
04:24 PM (IST) Jun 25
மின்சார வாகனங்களுக்கு காப்பீடு செய்யும் போது பேட்டரி, மோட்டார், சார்ஜிங் சாதனங்கள் போன்றவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கோ-பேமென்ட், விலக்குகள் போன்றவற்றை புரிந்து முழுமையான பாதுகாப்பு தரும் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.
04:03 PM (IST) Jun 25
OnePlus Nord 5ல் OnePlus 13 தொடரைப் போலவே 50MP Sony LYT-700 சென்சார், 8MP அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 50MP முன் கேமரா ஆகியவை இடம்பெறும். சில ஒற்றுமைகள் இருந்தாலும், Nord 5 இன் கேமரா அமைப்பு அதன் விலைக்கு ஏற்றவாறு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
04:02 PM (IST) Jun 25
கால்சியம் குறைபாடு இருந்தால் உடல் பலவீனம், எலும்புகள் பலமிழப்பது போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் தங்களின் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்கறிகள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
03:59 PM (IST) Jun 25
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும், தன்னைச் சந்தித்து கட்சிப் பொறுப்பு பெற்ற நிர்வாகிகளுக்கும் மட்டுமே எதிர்வரும் தேர்தலில் சீட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
03:55 PM (IST) Jun 25
புதிய கார் வாங்க நினைக்கிறீர்களா? SUV வாங்கலாமா அல்லது ஹேட்ச்பேக் வாங்கலாமா என்று குழப்பமா? எந்த காரின் மைலேஜ் அதிகம்? இப்போது இந்தக் கேள்விகளுக்கெல்லாம் AI பதில் சொல்லும். சில எளிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம், உங்களுக்கான் காரை கண்டறியலாம்.
03:50 PM (IST) Jun 25
வாழ்க்கை துணையிடம் சொல்லவே கூடாது மூன்று சொற்றொடர்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
03:48 PM (IST) Jun 25
ஜியோ ஹாட்ஸ்டார் தனது சந்தாதாரர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தி நெட்ஃபிளிக்ஸுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் மற்றும் ஜியோ சினிமாவுடன் இணைந்தது போன்ற காரணிகள் இதற்கு முக்கிய பங்காற்றியுள்ளன.
03:42 PM (IST) Jun 25
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டால் எத்தனை ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதை பார்க்கலாம்.
03:40 PM (IST) Jun 25
அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் ரகசியமாக உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஏவுகணை பாகிஸ்தானை அணுசக்தி எதிரியாகக் கருத வழிவகுக்கும்.
03:37 PM (IST) Jun 25
120 கிலோமீட்டர் வரம்பைக் கொண்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்ட லாஜிக்ஸ் மாடலை ஜூலை மாதம் வெளியிட Zelio E Mobiligy திட்டமிட்டுள்ளது.
03:26 PM (IST) Jun 25
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
03:19 PM (IST) Jun 25
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
03:15 PM (IST) Jun 25
வார இறுதி நாட்களில் வெளியூர் பயணம் செய்வோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.