Maargan First 6 Minutes Video Released : விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் மார்கன் படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் இடம் பெற்ற முதல் 6 நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

Maargan First 6 Minutes Video Released : இசையமைப்பாளராக இருந்து கொண்டு நடிகரானவர்களில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் ஒருவர். கடந்த 2006ஆம் ஆண்டு திரைக்கு வந்த கிழக்கு கடற்கரை சாலை படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு சிறப்பு தோற்றத்தை கொடுத்தது. TN 07 AL 4777, நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், கொலை, ரத்தம், ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் என்று ஏராளமான படங்களில் நடித்து பல படங்களை ஹிட் கொடுத்துள்ளார்.

அதில் பிச்சைக்காரன் படமும் ஒன்று. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர் படம் வெளியானது. இந்தப் படத்திற்கு பிறகு மார்க்கன் படம் உள்பட கை வசம் 5 படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் மார்க்கன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீசூக்கு தயாராகிவிட்டது. அதன்படி வரும் 27ஆம் தேதி மார்க்கன் படம் திரைக்கு வர இருக்கிறது. இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகிடா, வினோத் சாகர், கலக்க போவது யாரு அர்ச்சனா, கனிமொழி என்று ஏராளமான பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். அதோடு அவர் தான் படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்த படத்தின் முதல் 6 நிமிட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே படத்திற்கான புரோமோஷன் பணிகளுக்காக ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6, குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர்.

இப்போது அதையும் தாண்டி ஒரு படி மேலாக மார்க்கன் படத்தின் முதல் 6 நிமிட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அடுக்கடுக்காக நடக்கும் கொலை சம்பவங்களை கண்டுபிடிக்கும் பொறுப்பில் துருவ் ஏடிஜிபி மும்பை ரோலில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி களமிறங்குகிறார். படத்தின் 6 நிமிட வீடியோவில் உலகம் முழுவதும் வெறுக்கிறேன் என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்தப் படம் நிறம் தொடர்பான கதையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்ப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

Maargan - First 6 Minutes (Tamil) | Vijay Antony | Ajay Dhishan | Leo John Paul | #MaarganFromJune27