கால்சியம் குறைபாடு இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் மற்றும் அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க உடலில் போதுமான அளவு கால்சியம் இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில், கால்சியம் தான் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், தசை செயல்பாடு மற்றும் நரம்பு பரவலுக்கும் முக்கிய கனிமமாகும். ஒருவேளை உடலில் போதுமான அளவு கால்சியம் இல்லையென்றால், உடலானது பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக எலும்புகளை ரொம்பவே பலவீனமடைந்துவிடும். சின்ன காயங்கள் ஏற்பட்டால் கூட எலும்பு முறிவு போன்ற பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
தற்போது பலர் கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கால்சியம் சப்ளிமெண்ட்டை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் அவற்றை நம்பி இருப்பதற்கு பதிலாக கால்சியம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே சிறந்த வழியாகும். அந்த வரிசையில் உங்களது தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சிறந்த கால்சியம் நிறைந்த உணவுகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் :
1. எலும்புகள் பலவீனம் அடைதல் - கால்சியம் குறைபாட்டின் முதல் அறிகுறி எலும்புகள் பலவினம் அடைவது தான். அதாவது சின்ன காயம் ஏற்பட்டால் கூட எலும்பு சேதமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளன.
2. தசை வலி மற்றும் விறைப்பு - உடலில் போதுமான அளவு கால்சியம் இல்லை என்றால் கால்கள், கைகள் மற்றும் முதுகில் விறைப்பு அல்லது தசை வலி அடிக்கடி ஏற்படும்.
3. பற்கள் பலவீனமாகும் - கால்சியம் குறைபாட்டால் பற்கள் எளிதில் உடைந்து விடும் அல்லது பல் சொத்தை ஏற்படும் என்ற.
4. சோர்வு : கால்சியம் குறைபாட்டால் அதிகப்படியான சோர்வு ஏற்படும். இதனால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாமல் போகும்.
5. சரும, முடி மற்றும் நகங்களில் மாற்றம் - உடலில் போதுமான அளவு கால்சியம் இல்லையெனில் சருமம் வறண்டு போகும், முடி உதிரும் மற்றும் நகங்கள் உடையும்.
6. மனநிலை மாற்றங்கள் - கால்சியம் குறைபாட்டால் சிலருக்கு அதிகப்படியான மனக்கவலை மற்றும் எரிச்சல், பதட்டம் ஏற்படும்.
7. குழந்தைகளுக்கு பாதிப்பு என்ன?
கால்சியம் குறைபாட்டால் குழந்தைகளுக்கு பல் முளைப்பதில் தாமதம் ஆகும் மற்றும் வளர்ச்சி குறுகும்.
கால்சியம் குறைபாட்டை போக்க சாப்பிட வேண்டிய உணவுகள் ;
பால் மற்றும் பால் பொருட்கள் :
பால் மற்றும் பால் பொருட்கள் கால்ஷியத்தின் சிறந்த ஆதாரமாகும். கால்சியம் குறைபாட்டை போக்க தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்க வேண்டும். இது தவிர தயிர், மோர், சீஸ், பன்னீர், நெய் போன்ற பால் பொருட்களையும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும். பால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ரொம்பவே நல்லது. ஆனால் லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் சோயா பால் மற்றும் பாதாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
பச்சை இலை காய்கறிகள் :
பச்சை இலை காய்கறிகளில் கால்சியம் நிறைந்துள்ளன. எனவே கீரை, முட்டைகோஸ் போன்ற வற்றை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிடுங்கள். கீரையை நீங்கள் பருப்புடன், காய்கறிகள் அல்லது சூப்பாக கூட சாப்பிடலாம்.
