முக சுருக்கமே இல்லாம '40' வயதிலும் இளமையாக தெரிய ஈஸியான '3' டிப்ஸ்
40 வயதிலும் முகத்தில் சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

40 வயதிலும் இளமையாக தோன்ற
இளமையாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது. உண்மையான வயதை விட 10 வயது குறைவாக தெரியும் தோற்றம் வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் எப்போதுமே இளமையாக தோன்ற வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அந்த வகையில் 40 வயதிலும் முகத்தில் சுருக்கங்கள் ஏதும் விழாமல் இளமையாக தோன்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை செய்தால் போதும். அவை என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை :
ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளன. அது போல எலுமிச்சையில் ஹைட்ரேட் மற்றும் சுருக்கங்களை குறைக்கும் பண்புகள் உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் சருமம் இறுக்கமடையும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன்:
தேனில் வயதான தோற்றத்தை குறிக்கும் பண்புகள் உள்ளதால் அவற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது சுருக்கத்தை குறைப்பது மட்டுமில்லாமல் சருமத்திற்கு பல நன்மைகளையும் வழங்கும்.
ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை :
ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை இவை இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் போதும் வயதான தோற்றம் குறையும். இந்த முறையை இரவு தூங்குவதற்கு முன்பு தான் செய்ய வேண்டும்.
கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு:
கற்றாழை ஜெல் முகத்தில் தெரியும் வயதான தோற்றத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போலாகி அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சுருக்கங்கள் குறையும்.
எலுமிச்சை மற்றும் சர்க்கரை :
எலுமிச்சை மற்றும் சர்க்கரை இவை இரண்டும் சருமத்திற்கு ரொம்பவே நல்லது. எனவே இவை இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் முகத்தை கழுத வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் குறைய ஆரம்பிக்கும்.