ஒவ்வொருவரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக, பல அழகு குறிப்புகளை பயன்படுத்தி முக அழகை பராமரித்து வருகின்றனர். இருப்பினும், சிலருக்கு இள வயதிலேயே முகச் சுருக்கம் வந்து விடும். இதனால், அதிக வயதானவர்கள் போன்று தோற்றம் அளிக்கும்.  

சருமப் பராமரிப்பு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை கூடுதல் கவனத்தோடு பராமரித்தாலே மிக எளிதாக சரிசெய்து விடலாம். ஆனால் சருமத்தில் மிருதுத் தன்மை குறைந்து சுருக்கம் உண்டாகி விட்டால், உடனடியாக பராமரிப்பது அவசியமாகும். இல்லையெனில், வயது அதிகரிக்கும் போது உண்டாகும் சரும சுருக்கம் இளவயதிலேயே உண்டாகி, விரைவிலேயே மூப்புத் தோற்றத்தை உண்டாக்கி விடும். ஆகவே, இவற்றை தொடக்கத்திலே போக்குவதற்கு இயற்கை வழிகள் பல உள்ளது. இப்போது அதில் அசத்தலான டிப்ஸ் ஒன்றைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மைசூர் பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சரிசி - 2 தேக்கரண்டி
தக்காளி விழுது - 1 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
கஸ்தூரி மஞ்சள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை

மைசூர் பருப்பு மற்றும் பச்சரிசியை தலா 2 தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை தேவையான அளவு அதாவது 2 தேக்கரண்டி, சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இதனுடன் தயிர் 1 தேக்கரண்டி, அரைத்த தக்காளி விழுது 1 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1/2 தேக்கரண்டி ஆகிய 3 பொருட்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு, விழுதாக கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல்பக்கம் வரை அப்ளை செய்து கொள்ளுங்கள். அதாவது, கழுத்தில் இருந்து பேஸ் மாஸ்க் போட வேண்டும்

ஏறக்குறைய பத்து நிமிடங்கள் கழித்து, உங்களுடைய தோல் இறுக்கி பிடிக்கத் தொடங்கி விடும். அதன் பின்னர், கையில் லேசாகத் தண்ணீரைத் தொட்டு, உங்கள் முகத்தில் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் சோப்பு போடாமல் கழுவ வேண்டும். இதனை அடிக்கடி தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.

Healthy Rice: எந்த அரிசியை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது? ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கம் இதோ!

ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் இதனைச் செய்து வந்தாலே போதும். வயதான தோற்றம் தள்ளிப் போகும். முகத்தில் சுருக்கம் விழுந்தவர்கள், இதனைப் பயன்படுத்தினால் படிப்படியாக முகச்சுருக்கம் குறையும். முகத்தில் சுருக்கம் இல்லாத நபர்கள், இளமையாக இருக்கும் போதே இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தினால், முகத்தில் வரக்கூடிய சுருக்கம் தள்ளிப் போகும். இப்போதே முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.