உங்களுக்குப் பொருத்தமான காரை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? AI கூறும் பதில்கள்
புதிய கார் வாங்க நினைக்கிறீர்களா? SUV வாங்கலாமா அல்லது ஹேட்ச்பேக் வாங்கலாமா என்று குழப்பமா? எந்த காரின் மைலேஜ் அதிகம்? இப்போது இந்தக் கேள்விகளுக்கெல்லாம் AI பதில் சொல்லும். சில எளிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம், உங்களுக்கான் காரை கண்டறியலாம்.

1. உங்கள் அன்றாட ஓட்டுநர் முறை என்ன?
நீண்ட தூரப் பயணங்களை விரும்பினால், எஸ்யூவி அல்லது செடான் சிறந்தது. அலுவலகம் மற்றும் வீடு மட்டுமே, அதாவது நகரப் போக்குவரத்தில் மட்டுமே ஓட்டுகிறீர்களா? ஹேட்ச்பேக் சரியானதாக இருக்கும். பெருநகரில் வசிக்கிறீர்கள் என்றால், தானியங்கி கியர் கொண்ட காரைத் தேர்வு செய்யலாம்.
2. உங்கள் பட்ஜெட் என்ன?
5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக மாரூதி எஸ்-பிரஸ்ஸோ போன்ற அடிப்படை கார்கள் கிடைக்கும். 5-10 லட்சத்தில் டாடா பஞ்ச், ஹூண்டாய் i20 போன்ற திறன்மிக்க கார்களை வாங்கலாம். 10 லட்சத்திற்கு மேல் பாதுகாப்பு, ஸ்டைல் மற்றும் இடவசதி மூன்றையும் பெறலாம்.
3. பெட்ரோல், டீசல் அல்லது மின்சாரம் எது சிறந்தது?
தினசரி பயன்பாட்டிற்கு பெட்ரோல் நல்லது. நீண்ட தூரம் மற்றும் அதிக சக்தி தேவை என்றால் டீசல் காரைத் தேர்வு செய்யலாம். எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தால், டாடா நெக்ஸான் EV, MG ZS EV போன்ற மின்சார கார்களைப் பரிசீலிக்கலாம்.
4. காரின் அளவு முக்கியமா?
தனிநபர் அல்லது தம்பதியினருக்குச் சிறிய, சிக்கனமான கார் பொருத்தமானது. குடும்பத்திற்கு மாரூதி எர்டிகா அல்லது கியா கார்னிவல் போன்ற பெரிய எஸ்யூவி அல்லது 7-சீட்டர் கார்களைத் தேர்வு செய்யலாம்.
5. தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் எவ்வளவு முக்கியம்?
அடிப்படை கார் மட்டுமே தேவை என்றால், LXI அல்லது XE வேரியண்ட் போதுமானது. சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், டச்ஸ்கிரீன் மற்றும் ADAS போன்ற அம்சங்கள் தேவை என்றால், உயர் ரக வேரியண்ட்டைத் தேர்வு செய்யலாம்.
கார் வாங்க AI எப்படி உதவுகிறது?
AI இப்போது வெறும் சாட்பாட் அல்லது புகைப்பட ஜெனரேட்டர் அல்ல. AI அடிப்படையிலான கார் தேர்வு கருவிகள் மற்றும் வலைத்தளங்கள் உங்கள் விருப்பம், தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற சரியான காரைப் பரிந்துரைக்கின்றன. சில ஆட்டோ நிறுவனங்கள் AI அடிப்படையிலான கார் தேர்வு கருவிகளை வழங்குகின்றன. நீங்கள் அவர்களின் தளத்திற்குச் சென்று கேள்விகளுக்குப் பதிலளித்தால் போதும், AI உங்கள் ஓட்டுநர் பாணி, பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப காரைப் பரிந்துரைக்கும். இந்தக் கருவிகள் இப்போது பல டீலர்ஷிப் தளங்கள் மற்றும் செயலிகளில் உள்ளன.