நடிகர் விஜய் வைத்துள்ள கார் கலெக்‌ஷன்ஸ் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Actor Vijay Car Collections

நடிகர் விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஆவார். இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் அவர், இன்று (ஜூன் 22) தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் அவர் குறித்து தெரியாத தகவல்கள் பல வெளியாகி வருகிறது. இந்த பதிவில் அவருடைய கார் கலெக்ஷன் குறித்து விரிவாகப் பார்க்கலாம். நடிகர்கள் என்றாலே அதிக கார்களை வைத்திருப்பார்கள் என்று நமக்குத் தெரியும். அந்த வகையில் நடிகர் விஜயும் அதிக கார்களை வைத்துள்ளார். சிறுவயதிலிருந்தே கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக நடிகர் விஜய் விளங்கி வருகிறார். சிறிய வயதில் அதிக பொம்மை கார்களை வாங்கி விளையாடுவதே விஜயின் பொழுதுபோக்காக இருந்துள்ளது.

நடிகர் விஜய் வாங்கிய முதல் கார்

நடிகரான பின்னர் விஜய் தனக்கு பிடித்த கார்களை வாங்கத் துவங்கினார். பழமையான கார்களிடம் இருந்து மாடலான மினி கூப்பர் வரை அவரிடம் ஏராளமான கலெக்ஷன்கள் உள்ளன. 1990 களில் டாட்டா எஸ்டேட் மீது விஜய்க்கு அதிக ஆர்வம் உள்ளது. தற்போது இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் டாடா மோட்டார்ஸ் ஆரம்ப காலகட்டத்தில் தயாரித்த தரமான கார்களில் ஒன்றுதான் டாட்டா எஸ்டேட். இந்த கார் அப்போது மிகப் பிரபலமாக இருந்தது. இந்த காரை சுமார் 2.5 லட்சத்திற்கு விஜய் வாங்கியுள்ளார். நீளமானதாகவும், உட்காருவதற்கு வசதியுடனும் இருந்த அந்த லக்சரி காரில் சென்னையில் பல இடங்களில் நண்பர்களுடன் விஜய் சுற்றியுள்ளார். அதன்பின்னர் அவர் பிரீமியர் 118 என் இ காரை வாங்கி உள்ளார். இந்த காரை சுமார் ஆறு லட்ச ரூபாய்க்கு அவர் வாங்கி உள்ளார்.

விஜய்க்கு பிடித்த இனோவா கார்

இந்தக் காரை வாங்கிய பின்னர் விஜய்க்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே அவர் மேலும் லக்சரி கார்களை வாங்கத் தொடங்கினார். ரூ.15 லட்சம் மதிப்பிலான டாட்டா சியாரா காரை வாங்கிய அவர், அதைத் தொடர்ந்து இனோவா கிரிஸ்டா காரை ரூ.20 லட்சத்துக்கு வாங்கினர். இனோவா விஜய்க்கு பிடித்தமான கார்களில் ஒன்றாக மாறியது. அவர் இந்த காரை தனது அன்றாட போக்குவரத்திற்காக பயன்படுத்தத் தொடங்கினார். இனோவா காருக்கு பின்னர் அவர் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்க ஆரம்பித்தார். சொகுசு கார்களை நிறுத்துவதற்காகவே தனது வீட்டின் மாடியில் பார்க்கிங்கையும் அவர் ஏற்படுத்தினார். கார்கள் லிஃப்ட் மூலமாக மாடிக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த லக்சரி கார்களுள் முக்கியமானது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ் காரால் சந்தித்த பிரச்சனை

இந்தக் காரை வாங்கிய பின்னர் விஜய்க்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டன. வரி செலுத்துவது தொடர்பாக அவர் பல சிக்கல்களை சந்தித்தார். சமூக வலைதளங்களிலும் இது பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த கார் மட்டுமல்லாமல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம் மாடலும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார்களின் விலைகள் ரூ.8 முதல் ரூ.9 கோடி வரை இருக்கும். Rolls-royce கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஆனால் விஜய் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. விஜய் மட்டுமல்லாமல் அவரது மனைவி சங்கீதாவும் ஒரு கார் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் ஆடி, ஏ8 எல் நிஸான், எக்ஸ் டிரைல் மற்றும் மினி கூப்பர் போன்ற லக்சரி கார்களையும் விஜய் வைத்துள்ளார்.

ஆடி ஏ8 எல் மற்றும் பென்ஸ் GLA

விஐபிகளுக்கு என பாதுகாப்பு கவசங்களுடன் வடிவமைக்கப்பட்டது ஆடி ஏ8 எல் கார். எந்த நேரமும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று கருதும் விஐபிகள் இந்த காரை வைத்திருப்பர். இது 340 பிஎஸ் பவர் மற்றும் 500nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 48V மைல்டு ஹைபிரிட் செட்டப்பைக் கொண்ட கார் ஆகும். இது புல்லட் ப்ரூப் கிளாஸ் மற்றும் பாடியை கொண்டுள்ளது. இந்த காரின் டயர்கள் பாதிக்கப்பட்டாலும் நிற்காமல் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கார் ரூ.2 கோடி வரை விற்பனையாகிறது. விஜய் வைத்திருக்கும் மற்றொரு கார் வகை பென்ஸ் ஜி.எல்.ஏ இந்தியாவின் முன்னணி சொகுசு கார் விற்பனையாளராக பென்ஸ் விளங்குகிறது. இந்த காரின் விலை சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

BMW கார்கள்

நடிகர் விஜய் BMW ரகத்தில் ஐந்து கார்களை வைத்துள்ளார். பிஎம்டபிள்யூ 7, பிஎம்டபிள்யூ எக்ஸ் 6, பிஎம்டபிள்யூ 5, பிஎம்டபிள்யூ 3, பிஎம்டபிள்யூ ஐ 7 எக்ஸ் டிரைவ் 60 உட்பட ஐந்து கார்களை அவர் வைத்துள்ளார். இவற்றில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடல் இரண்டு கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. 5 சீரிஸ் ரூ.90 லட்சம் வரையிலும், 3 சீரிஸ் ரூ.50 லட்சம் முதல் 60 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல் x6 மாடலானது ஒரு கோடிக்கு மேல் விற்பனையாகிறது. சமீபத்தில் விஜய் வாங்கிய i7 எலக்ட்ரிக் கார் ரூ.2.5 கோடி வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மினி கூப்பர்

குட்டியாகவும் அதே சமயத்தில் க்யூட் ஆகவும் இருக்கும் சொகுசு கார் தான் மினி கூப்பர். இது அதிகபட்சமாக 235 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். நடிகர் விஜய்யின் கார் லைன் அப்பில் மினி கூப்பர் முக்கிய இடம் வகிக்கிறது. ரூ.43 லட்சம் ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சொகுசு கார்களுடன் அவரிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக், ஃபோர்ட் மஸ்டாங், வால்வோ எக்ஸ்90, மாருதி சுசுகி செலரியோ உள்ளிட்ட பல கார் வகைகள் உள்ளன.