Pandian Stores 2 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 515ஆவது எபிசோடில் ரூ.10 லட்சம் பணத்திற்கு செந்தில் எங்கு அலைந்து திரிந்தாலும் கிடைக்கவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Pandian Stores 2 Today Episode : வீட்டிற்கு தெரியாமல் பணத்தை எடுத்து அது தெரியவரும் போது மனசு படும் கஷ்டம் தான் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடந்து கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் அரசு வேலை கிடைக்க ரூ. 10 லட்சம் பணத்தை எடுத்துச் சென்று தனது மாமனாரிடம் கொடுத்ததால் இப்போது செந்தில் பல விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். ஒருவேளை வேலை கிடைத்தால் தான் போச்சு, இல்லையென்றால் அரசு வேலையோடு பணமும் பறிபோன கதையாகிவிடும்.

அப்படி ஒரு சீன் இன்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடக்கவில்லை. எனினும் கூடிய விரைவில் அப்படியொரு சீன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 515ஆவது எபிசோடு:

இன்றைய 515ஆவது எபிசோடில் செந்தில் அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுத்ததை தனது தம்பி கதிரிடம் கூறிவிட்டார். இதைத்தொடர்ந்து தனது அப்பாவிடம் சொல்லி திட்டு வாங்குவதற்கு பதிலாக தனது அத்தையிடம் சொல்லிவிடலாம் என்று கதிர் ஐடியா கொடுக்க கதிர் மற்றும் செந்தில் இருவரும் அத்தையின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு வீட்டில் யாரும் இல்லை. இதைத் தொடர்ந்து கதிர் அத்தைக்கு போன் போட்டு உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்ல அதற்கு அத்தையோ பேச விருப்பம் இல்லை என்று கூறி போனை கட் செய்துவிட்டார்.

கடைக்கு வர சொன்ன பாண்டியன்

அந்த நேரம் பார்த்து பாண்டியன் போன் போட்டு பணத்தை எடுத்துக் கொண்டு கடைக்கு வா என்று கூற செந்தில் புறப்பட்டுச் செல்கிறார். கதிர் தனது நண்பர்கள் மூலமாக பணம் கிடைக்குமா என்று முயற்சி செய்து பார்க்க சென்றுள்ளார். அப்படி அவர் முயற்சி செய்து பார்த்தும் பலன் இல்லை. இதைத் தொடர்ந்து செந்தில் வேறு வழியில்லாமல் மீனாவிடம் வந்து நிற்கிறார்.

மீனாவிடம் கதறிய செந்தில்

மீனாவோ தன்னால் என்ன செய்ய முடியும். நான் அப்போதே உங்களிடம் சொன்னேன். நீங்கள் எதுவும் கேட்கவில்லை. இப்போது ஒன்றும் செய்ய முடியாது என்று கூறவே, நான் எங்காவது ஓடி போயிடவா என்று கூறி கதறி அழுகிறார். தன்னுடைய அப்பா தனக்கும் பணம் கொடுத்து தான் அரசு வேலை வாங்க வேண்டும் என்று சொன்னார். நான் தான் முடியாது என்று கூறி படித்து அரசு வேலை வாங்கினேன். நீங்களும் படித்திருந்தால் அரசு வேலை எப்படியும் வாங்கிவிடலாம்.

குறைந்தது ஒரு தேர்வு, இல்லையென்றால் 2 தேர்வு எழுதி பாஸ் பண்ணி அரசு வேலை வாங்கியிருக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். ஆனால், இப்போது அதனால் எந்த பிரயோஜனும் இல்லை. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 515ஆவது எபிசோடு முடிவடைகிறது. இனி நாளை என்ன நடக்கும் என்பது போன்ற புரோமோ வெளியானது. அதில், பணத்திற்கு எவ்வளவோ போராடியும் எந்த பிரயோஜனும் இல்லை. இந்த நிலையில் தான் பணத்தை வாங்க மாமா வந்திருக்கிறார். அவர் முன்பாக பணத்தை எடுத்தயா என்று கேட்க, உண்மையை சொல்லும் நிலை வருகிறது. இனி நாளை என்ன நடக்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.