Chikitu Musical Video Released : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான சிக்கிட்டு பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
Chikitu Musical Video Released : ரஜினிகாந்த் தனது 171ஆவது படமான கூலி படத்தில் நடித்து வருகிறார். எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்த ரஜினிகாந்த் கூலி படத்தையும் ஹிட் கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் உருவாகி வருகிறது. கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், காளி வெங்கட், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும், அமீர் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். இதில், பூஜா ஹெக்டே குத்துப்பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடியிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே மாஸ் ஹீரோக்களான அஜித், கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் நடித்த படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த படமும் வெளியாக இருக்கிறது.
சிக்கிட்டு முதல் சிங்கிள் டிராக் வெளியீடு
இந்த நிலையில் தான் கூலி படத்தின் முதல் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது. சிக்கிட்டு என்று தொடங்கும் அந்தப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் இசையில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இப்பாடலுக்கு அறிவு பாடல் வரிகளை எழுதி உள்ளார். நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் கோரியோகிராப் செய்திருக்கும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோவில் அனிருத் மற்றும் டி ராஜேந்தரும் இணைந்து நடனமாடி இருக்கின்றனர். கூலி திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
இன்னும் 50 நாட்களில் கூலி
இந்த நிலையில் தான் இன்னும் 50 நாட்களில் படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கில் வேதேஷ்வரா மூவிஸ் பேனர் நிறுவனத்தின் மூலமாக ராமாராவ் வாங்க முன் வந்துள்ளாராம். அதுவும் ரூ.46 கோடிக்கும் அதிகமாக கொடுத்து வாங்க இருக்கிறாராம்.
தெலுங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்
தெலுங்கில் இப்படத்தை Vedhaksara Movies Banner ராமாராவ் கூலி படத்தை வாங்க முன்னிலையில் உள்ளார்களாம். இது வரையில் எந்த ஒரு படத்தையும் இவ்வளவு தொகைக்கு எந்த நிறுவனமும் வாங்க முன் வரவில்லை. இதுவே முதல் முறை என்றும் ரெக்கார்டு பிரேக்கிங் டீல் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கூலி படத்தின் திரையரங்கிற்கு பிறகான ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.110 கோடி வாங்கியிருக்கிறது. ஸ்டேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கொண்டுள்ளது.
கூலி வெளிநாட்டு விநியோக உரிமை
பிங்க்வில்லாவின் கூற்றுப்படி வெளிநாட்டு விநியோக உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனல் ரூ.68 கோடிக்கு வாங்கியது. தமிழில் கூலி என்ற டைட்டிலில் வெளியாகும் இந்தப் படம் ஹிந்தியில் மஜ்தூர் என்ற டைட்டிலில் வெளியாக இருக்கிறது. மேலும், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டீசர் சர்ச்சை:
கூலி படத்தின் டீசர் வெளியான போது டீசரில் வா வா பக்கம் வா என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. தனது அனுமதி இல்லாமல் இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி இளையராஜா 1957 காப்புரிமை சட்டத்தின் கீழ் காப்புரிமை கோரினார். அதோடு உடனடியாக அந்த பாடல் வரிகளை நீக்க வேண்டும் அல்லது முறையாக அனுமதி பெற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இது குறித்து ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பிய போது அது தயாரிப்பாளருக்கும், இளையராஜாவிற்கும் இடையிலான பிரச்சனை என்று கூறி இந்த பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கினார். எனினும் விமர்சகர் சதீஷ் குமாரின் கூற்றுப்படி, பாடலின் மியூசிக் லேபிளான எக்கோ சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கொண்டிருந்த நிலையில், டீசரில் இடம் பெற்றிருந்த அந்த பாடலுக்கும் இளையராஜாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. பின்னர் மியூசிக் கொண்டிருந்த நிறுவனம் அந்த பாடலை சன் பிக்ஸர்ஸ் நிறுவனத்திற்கு விற்றதைத் தொடர்ந்து இனி இந்த பாடல் உரிமையில் இளையராஜா உரிமை கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியது.

