- Home
- Tamil Nadu News
- Koomapatty தனி தீவுங்க; இன்ஸ்டா ட்ரெண்டிங் வில்லேஜ் கூமாப்பட்டி எங்கு உள்ளது? அங்கு என்ன ஸ்பெஷல்?
Koomapatty தனி தீவுங்க; இன்ஸ்டா ட்ரெண்டிங் வில்லேஜ் கூமாப்பட்டி எங்கு உள்ளது? அங்கு என்ன ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராமை திறந்தாலே கூமாப்பட்டி என்கிற கிராமத்தை பற்றிய ரீல்ஸ்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அந்த கிராமம் எங்கு உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.

Koomapatty Village
இன்றைய காலகட்டத்தில் விரல் நுனியில் உலகம் வந்துவிட்டது. உலகில் என்ன நடந்தாலும் அதை நம்மால் ஈஸியாக செல்போன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்க்கையில் இன்ஸ்டாகிராம் ஒரு அங்கமாகிவிட்டது. அதில் ரீல்ஸ் பார்ப்பது தான் பலருக்கும் டைம் பாஸ் ஆக இருந்து வருகிறது. ஏராளமானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதால், அதன் மூலம் மக்களை கவர இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சர்களும் விதவிதமான கண்டெண்டுகளை போட்டு வருகிறார். அதில் ஏதேனும் டிரெண்ட் ஆனால், அதை பெரும்பாலானோர் பின் தொடர்வதும் உண்டு.
டிரெண்டிங் வில்லேஜ் கூமாப்பட்டி
அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே இன்ஸ்டாகிராமில் மிகவும் டிரெண்டிங் ஆக சென்றுகொண்டிருக்கும் ஒரு இடம் தான் கூமாப்பட்டி. ஏங்க... உங்களுக்கு டென்ஷனா இருந்தாலும் சரி, ஸ்ட்ரெஸ்ஸா இருந்தாலும் சரி கூமாப்பட்டிக்கு வாங்க; கூமாப்பட்டி தனி தீவுங்க என சொல்லி ஒருவர் போட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பட்டிதொட்டியெங்கும் பரவி அந்த கிராமத்தை பேமஸ் ஆக்கியது. கூமாப்பட்டி கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் தான் இந்த கூமாப்பட்டி.
கூமாப்பட்டி பேமஸ் ஆனது எப்படி?
ஒரு பக்கம் மேற்குத்தொடர்ச்சி மலை, மறுபக்கம் விவசாய நிலம் என இயற்கையின் சொர்க்க பூமியாக இருக்கும் இந்த கூமாப்பட்டியை பேமஸ் ஆக்கிய பெருமை அந்த ஊரைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ஃபுளுயன்சரை தான் சேரும். அவர் தன் பெயரைக் கூட தன்னுடைய வீடியோவில் சொன்னதில்லை. ஆனால் தன்னுடைய வீடியோவில் அவர் கூமாப்பட்டி பெயரைத் தான் இடைவிடாமல் சொல்லுவார். அவரின் ரீல்ஸ் வீடியோக்களால் தான் கூமாப்பட்டி மிகவும் பேமஸ் ஆனது. அதிலும் அவர் கூமாப்பட்டி தனி ஐலாண்டுங்க என குறிப்பிடுவார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தமிழ்நாட்டுக்குள் இப்படி ஒரு தீவா என வலைவீசி தேட ஆரம்பித்தனர்.
கூமாப்பட்டி எங்கு உள்ளது?
தற்போது இணையத்தில் அதிகம் தேடப்படும் ஊர் ஆக கூமாப்பட்டி தான் உள்ளது. இந்த கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு என்கிற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தான் கூமாப்பட்டி அமைந்திருக்கிறது. தற்போது டிரெண்டாகி வருவதால் ஏராளமானோர் கூமாப்பட்டி நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். இனி வரும் நாட்களில் அந்த ஊர் சுற்றுலாத் தளமாக மாற வாய்ப்பு உள்ளது.
கூமாப்பட்டி அருகில் தான் பிளவக்கல் அணையும் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஒரு பூங்காவும் உள்ளது. இதனால் கூமாப்பட்டி பலரது டிராவல் டெஸ்டினேஷனாக மாறி வருகிறது. இப்படி கூமாப்பட்டி டிரெண்ட் ஆவதை பார்த்து சிலர், மற்ற சுற்றுலாத் தளங்களை போல் இந்த ஊரையும் மாசுப்படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.