இன்ஸ்டா போல மாறும் வாட்ஸ்அப்! ஸ்டேட்டஸ் அப்டேட்டில் புது வசதி!
WhatsApp Update: வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் போன்ற புதிய அம்சத்தை சோதித்து வருகிறது. பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் இசையைச் சேர்க்க அனுமதிக்கும் இந்த அம்சம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WhatsApp Update
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய அம்சங்களைச் சோதித்து வருகிறது. டபுள்-டேப் ரியாக்ஷன்கள், செல்ஃபி ஸ்டிக்கர்கள் மற்றும் பகிரக்கூடிய ஸ்டிக்கர் பேக்குகள் போன்ற அம்சங்களுடன் சிறிய அப்டேட் கடந்த வாரம் வெளியானது.
WhatsApp Status Update
இப்போது, புதிதாக இன்ஸ்டாகிராம் போன்ற அம்சத்தை சோதித்து வருகிறது. வரவிருக்கும் புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் இசையைச் சேர்க்கலாம். இது இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ளதைப் போல் இருக்கும். இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WhatsApp New Feature
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் இசையைச் சேர்க்கும் அம்சத்தை கொண்டு வருகிறது என WABetaInfo கூறியுள்ளது. சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த அம்சம், இது இப்போது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டும் கிடைக்கிறது.
WhatsApp Latest Update
ஆண்ட்ராய்டு 2.25.2.5 அப்டேட்டிற்கான வாட்ஸ்அப் பதிப்பை பயன்படுத்தும் பீட்டா பயனர்கள் இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பயன்படுத்திப் பார்க்கலாம். ஸ்டேட்டஸ் அப்டேட்டில் டிராயிங் எடிட்டரில் புதிதாக ஒரு மியூசிக் பட்டனைக் இருக்கும். அதில் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை இணைக்கலாம்.
WhatsApp Features
இன்ஸ்டாகிராம் போல மியூசிக் லைப்ரரி ஒன்றையும் வாட்ஸ்அப்பில் இருக்கும். விரும்பிய பாடலைத் தேர்ந்தெடுத்த பிறகு, எந்த இசைப் பகுதியை ஸ்டேட்டஸில் இணைக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம். போட்டோ ஸ்டேட்டஸ் அப்டேட்டில் 15 வினாடிகள் வரை இசையைச் சேர்க்கலாம். அதேசமயம், வீடியோக்களுக்கு அவற்றிட் நீளத்துக்கு ஏற்ப இசையைச் ஒருங்கிணைக்க முடியும்.
WhatsApp Tips and Tricks
ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்ட பிறகு, இன்ஸ்டாகிராம் செயலியில் எப்படிப் பார்க்கிறோமோ அதைப்போலவே எந்தப் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் பிறர் பார்க்க முடியும். தற்போதைய நிலவரப்படி, வாட்ஸ்அப்பின் மியூசிக் ஃபார் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் (Music for Status Updates) அம்சம் சோதிக்கப்பட்டு வருகிறது. iOS 25.1.10.73 அப்டேட்டிற்கான வாட்ஸ் பீட்டா பதிப்பிலும் இதே போன்ற அம்சம் உள்ளது. எனவே, இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கும் இந்த வசதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.