MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொங்குநாட்டுக்கு பெரிய சர்ப்ரைஸ்.. சேலம்–செங்கப்பள்ளி சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றம்.. மெகா அப்டேட்

கொங்குநாட்டுக்கு பெரிய சர்ப்ரைஸ்.. சேலம்–செங்கப்பள்ளி சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றம்.. மெகா அப்டேட்

சேலம்–செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை (NH 544) ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் கொங்கு மண்டலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 20 2026, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சேலம் செங்கப்பள்ளி சாலை
Image Credit : Google

சேலம் செங்கப்பள்ளி சாலை

சேலம்–செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை (NH 544) விரைவில் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. தற்போதைய நான்கு வழித்தடமாக இயங்கும் இந்த முக்கிய பாதையின் 102.5 கிலோமீட்டர் பகுதியை விரிவுபடுத்தும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கிறது வேலைகள் நடைபெற்று வருகின்றன. அறிக்கை முடிந்தது, அடுத்த கட்ட நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆறுவழிச்சாலை திட்டம்
Image Credit : Google

ஆறுவழிச்சாலை திட்டம்

இந்த சாலை சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களையும், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கொச்சி போன்ற நகரங்களையும் இணைக்கும் முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து இணைப்பாக உள்ளது. செங்கப்பள்ளி–கோவை இடையேயான 54 கி.மீ. பகுதி ஏற்கனவே ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் சேலம் வரை உள்ள பகுதி இன்னும் நான்கு வழித்தடமாக வருவதால், போக்குவரத்து அழுத்தம் அதிகரித்து வருகிறது.

Related Articles

Related image1
1 லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு மைலேஜ் தருகிறது நிசான் கிராவைட்.? இப்பவே வாங்கிடலாம் போலயே
Related image2
குறைந்த சம்பளத்தில் கூட டாடா பஞ்ச் காரை வாங்கலாம்.. மாத EMI இவ்வளவு தான்.. முழு விபரம்
35
செங்கப்பள்ளி சாலை விரிவு
Image Credit : Google

செங்கப்பள்ளி சாலை விரிவு

தினமும் சுமார் 30,000 வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் அதிகம் இயங்குவதால், உச்ச நேரங்களில் நெரிசல் நிலை உருவாகிறது. இதனால் பயண நேரம் நீளுவதோடு, எரிபொருள் நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வு அதிகரிக்கும் பிரச்சனையும் எழுகிறது. இந்த நிலையில், சாலை விரிவாக்கம் அவசியமானதாக மாறியுள்ளது.

45
கொங்கு மண்டல வளர்ச்சி
Image Credit : Google

கொங்கு மண்டல வளர்ச்சி

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், இந்த சாலை விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டிபிஆர் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, அதன் அடிப்படையில் விரைவில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

55
தேசிய நெடுஞ்சாலை திட்டம்
Image Credit : stockPhoto

தேசிய நெடுஞ்சாலை திட்டம்

இதனுடன், சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. சரளை மற்றும் நாசியனூர் சந்திப்புகளில் வாகனப் பாதைகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் அழைக்கப்படுகின்றன. பெத்தம்பாளையம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலப் பணிகள் ஏற்கனவே அனுமதி பெற்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பாடுகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், கொங்கு மண்டலப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சேலம்
நெடுஞ்சாலை
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
கோயம்புத்தூர்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Praveen Chakravarty: தவெக தயவில் எம்.பி.யாகும் ராகுலின் வலது கரம்! யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?
Recommended image2
வைகை எக்ஸ்பிரஸ், குருவாயூர் ரயில் சேவைகளில் மாற்றம்! பயணிகளுக்கு முக்கிய அலர்ட்!
Recommended image3
Magalir Urimai Thogai: பெண்களுக்கு ஜாக்பாட்! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
1 லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு மைலேஜ் தருகிறது நிசான் கிராவைட்.? இப்பவே வாங்கிடலாம் போலயே
Recommended image2
குறைந்த சம்பளத்தில் கூட டாடா பஞ்ச் காரை வாங்கலாம்.. மாத EMI இவ்வளவு தான்.. முழு விபரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved