MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தை ரவுண்ட் கட்டும் மழை.. ஹாட் ஸ்பாட் இதுதான்.. லிஸ்ட் போட்ட வானிலை மையம்!

தமிழகத்தை ரவுண்ட் கட்டும் மழை.. ஹாட் ஸ்பாட் இதுதான்.. லிஸ்ட் போட்ட வானிலை மையம்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 20 2026, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சுட்டெரிக்கும் வெயில்
Image Credit : our own

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25
 காற்றழுத்த தாழ்வு பகுதி
Image Credit : our own

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வழுவிழக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இதனிடையே பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிப்ரவரி 20ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்களே எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? முடிவுகள் வெளியானது!
Related image2
சனிக்கிழமை காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம்?
35
பிப்ரவரி 21ம்
Image Credit : Asianet News

பிப்ரவரி 21ம்

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன், மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
பிப்ரவரி 22ம்
Image Credit : Asianet News

பிப்ரவரி 22ம்

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி. மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

55
இன்றை சென்னை வானிலை அப்டேட்
Image Credit : Asianet News

இன்றை சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31–32° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23–24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Recommended image3
இன்றும் தரமான சம்பவம் இருக்காம்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Related Stories
Recommended image1
பள்ளி மாணவர்களே எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? முடிவுகள் வெளியானது!
Recommended image2
சனிக்கிழமை காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved