இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:57 PM (IST) Oct 24
Sharwanand Transformatio to Six Pack Look : ஷர்வானந்த் தனது 36வது படமான 'பைக்கர்' படத்தில் ஒரு ரேஸராக நடிக்கிறார். இந்த படத்திற்காக அவர் தனது உடலை முற்றிலுமாக மாற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
11:38 PM (IST) Oct 24
ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஸ்டார் நடிகை, சுமார் 1000 கோடி சொத்துக்களுக்கு அதிபதி. திரையுலகம் தன்னை ஒதுக்கியதாக குற்றம் சாட்டியவர். தற்போது ஹாலிவுட்டில் இருந்து பான்-வேர்ல்ட் படத்தில் நடிக்கும் அந்த நடிகை யார் தெரியுமா?
11:13 PM (IST) Oct 24
வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல், இந்திய எல்லை அருகில் சீனாவின் கட்டிடம், கர்னூல் பேருந்து விபத்து, மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் காணலாம்.
10:57 PM (IST) Oct 24
இந்த மாபெரும் கண்டுபிடிப்பு பீகாரை இந்தியாவின் செல்வந்த மாநிலமாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும். அது எந்த மாநிலம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
10:42 PM (IST) Oct 24
பிக்சட் டெபாசிட் முதலீடுகள் இன்றும் பிரபலமாக உள்ளன. முதலீட்டாளர்கள் தங்கள் தேவை மற்றும் இடர் ஏற்கும் திறனைப் பொறுத்து வங்கியைத் தேர்வு செய்ய வேண்டும்.
10:38 PM (IST) Oct 24
ஆஸ்திரேலிய தொடரில் பார்ம் இல்லாமல் தவித்து வரும் விராட் கோலிக்கு, இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார். இந்திய வெற்றிக்கு விராட் பார்ம் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.
10:34 PM (IST) Oct 24
ஸ்பெயினில் கண்காட்சிக்காகக் கொண்டு செல்லப்பட்டபோது காணாமல் போன, உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் 'ஸ்டில் லைஃப் வித் கிட்டார்' என்ற அரிய ஓவியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10:27 PM (IST) Oct 24
டாப்-அப் வீட்டுக் கடன் என்பது உங்கள் தற்போதைய வீட்டுக் கடனில் கூடுதல் நிதி பெறும் ஒரு வசதியாகும். தனிநபர் கடனை விட குறைந்த வட்டி விகிதத்தில் கிடைப்பதால், வீட்டுப் பழுது, கல்விச் செலவு போன்ற பல்வேறு தேவைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.
10:23 PM (IST) Oct 24
கார் ரேஸில் வெளிநாடுகளில் பிஸியாக இருந்த அஜித் இப்போது தீபாவளிக்காக சென்னை வந்திருந்த சூழலில் குலதெய்வ கோயிலான பகவதி அம்மன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று பிரார்த்தனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
10:17 PM (IST) Oct 24
Virat Kohli Australia Exit Rumor: விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் வெளியேறியதாக தகவல் பரவி வருகிறது. இதில் உண்மை என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
09:43 PM (IST) Oct 24
செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு செல்வபெருந்தகையை கூப்பிடாததில் எந்த தவறும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். செல்வபெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
09:36 PM (IST) Oct 24
வங்கியில் பணம் செலுத்துவது சாதாரண செயலாக இருந்தாலும், சில விதிகளை பின்பற்றாமையால் பிரச்சனை ஏற்படலாம். தவறான டெபாசிட் செய்வது உங்கள் வீட்டுக்கு அதிகாரிகள் வருவதற்கும், கணக்கு விசாரணைக்கு காரணமாக இருக்கலாம்.
09:12 PM (IST) Oct 24
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க 9 கேட்வே எர்த் ஸ்டேஷன்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்திற்காக 100 டெர்மினல்களை இறக்குமதி செய்ய மட்டுமே தற்போது அனுமதி பெற்றுள்ளது.
09:03 PM (IST) Oct 24
கடந்த செப்டம்பர் மாத மருந்து சோதனையில், 112 மருந்துகள் தரமற்றவை என சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இவற்றில் ஒரு மருந்து போலியானது என்றும், நோயைக் குணப்படுத்தும் மூலப்பொருள் சரியான அளவில் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
09:00 PM (IST) Oct 24
Rahul Tiky Mother Breaks Down Remembering Her Son: இந்த ஆண்டு ஜனவரி மாதம் விபத்தில் சிக்கி உயிரிழந்த, யூடியூப் பிரபலம் ராகுல் டிக்கியில் அம்மா, தன்னுடைய மருமகள் பற்றி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
08:54 PM (IST) Oct 24
Kathir Surprise Gift to Gandhimathi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் விழாவில் கதிர் தாத்தாவுடன் இருக்கும் அம்மாச்சியின் போட்டோ ஃபிரேமை பரிசாக கொடுத்துள்ளார்.
08:49 PM (IST) Oct 24
கேரள அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது போன்று தமிழக அரசும் இணைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
08:28 PM (IST) Oct 24
உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின், ரஷ்யா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது என்று கூறியுள்ளார்.
07:54 PM (IST) Oct 24
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் புகைப்படத்துடன் வெளியான போஸ்டை பார்த்து ஒட்டுமொத்த புதுவையும் அதிர்ந்தது. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
07:22 PM (IST) Oct 24
உத்தரப் பிரதேசம் தேவரியாவில், தனது 6 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பரின் பிறப்புறுப்பை அறுத்து பழிதீர்த்த தந்தை, பின்னர் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டார்.
07:08 PM (IST) Oct 24
Junior Hockey World Cup 2025: தமிழகத்தில் நடக்கும் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி விலகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
06:59 PM (IST) Oct 24
Muthuvel Sakthivel Shock Pandian Family Happy : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் காந்திமதியின் பிறந்தநாள் விழாவில் கதிர் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் கொடுத்து அனைவரையும் இன்ப அதிர்ச்சி அடையச் செய்தார்.
06:17 PM (IST) Oct 24
Janhvi Kapoor Insta Post Viral : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர் திருமணத்தை உறுதி செய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
06:14 PM (IST) Oct 24
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில், பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் பாலியல் வன்கொடுமையே காரணம் என அவர் உள்ளங்கையில் எழுதிய கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
05:50 PM (IST) Oct 24
இலவசம் மட்டுமே தமிழர்களை மேம்படுத்தி விட முடியாது. எல்லோருக்கும் எதற்கு இலவசம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசின் இலவச திட்டங்களை வைரமுத்து மறைமுகமாக சாடியதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
05:19 PM (IST) Oct 24
Karthigai Deepam 2 Serial: கார்த்திகை தீபம் 2 சீரியலில் வங்கியில் ரூ.5 கோடி எடுக்க முடியாத நிலையில் தொழிலாளிகளுக்கு 20 சதவிகித போனஸ் கொடுக்க சாமுண்டீஸ்வரி என்ன செய்கிறார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:06 PM (IST) Oct 24
05:06 PM (IST) Oct 24
காவல்துறையும், அரசு இயந்திர அதிகாரிகளும் கண்டும், காணாததுபோல அலட்சியப்படுத்தி விட்டு விடுகின்றனர். அரசியல் கட்சியினரும் இதனால் தங்களது ‘வாக்கு வங்கி’ பாதிக்கப்படுமோ என்பதற்காகத் தெரிந்தும், தெரியாததுபோல் நடந்து கொள்கின்றனர்
04:47 PM (IST) Oct 24
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணியும், இந்திய பெண்கள் கபடி அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளன. இரண்டு அணியிலும் தமிழக வீரர், வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
04:29 PM (IST) Oct 24
Comedy Actor Muthukalai Gets Emotional: பிரபல காமெடி நடிகர் முத்துக்காளை, தன்னுடைய பல வருட கனவு நிறைவேறி விட்டதாக ஆனந்த கண்ணீருடன் முக்கிய தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
04:26 PM (IST) Oct 24
திபெத்தில் பாங்காங் ஏரிக்கு கிழக்கே, இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் சீனா புதிய வான் பாதுகாப்புத் தளத்தை தீவிரமாக கட்டி வருகிறது. செயற்கைக்கோள் படங்கள், ஏவுகணைகளை மறைத்து வைக்கும் திறன் கொண்ட மூடப்பட்ட ஏவுதளங்கள் இருப்பது தெரிகிறது.
04:18 PM (IST) Oct 24
10th and 12th class public examination schedule : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனர் தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். இந்த அட்டவணை வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
04:14 PM (IST) Oct 24
பாகிஸ்தானில், நக்வியின் இந்த நடவடிக்கை இந்திய அணிக்கு ஒரு வலுவான எதிர்வினையாகவும், ஒரு பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்சினை இனி விளையாட்டுத் துறையுடன் மட்டும் நின்றுவிடவில்லை.
04:01 PM (IST) Oct 24
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் அவதிப்படுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். போதிய திட்டமிடல் இல்லாததால் கொள்முதல் மந்தமாக நடைபெறுவதாகவும், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
03:52 PM (IST) Oct 24
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு இரண்டு 100 கோடி வசூல் படங்களை கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன், அவரைப்போல் வேறு எந்தெந்த ஹீரோக்கள் எல்லாம் 100 கோடி வசூல் அள்ளி உள்ளனர் என்பதை பார்க்கலாம்.
03:47 PM (IST) Oct 24
சென்னையில் ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் என்னென்ன வசதிகள் உள்ளன? நுழைவுக் கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பார்க்கலாம்.
03:20 PM (IST) Oct 24
Annam Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் தொடரில் இருந்து, இரண்டாவது நாயகியாக நடித்து வந்த திவ்யா கணேஷ் திடீரென விலகியுள்ளார்.
03:19 PM (IST) Oct 24
வாணியம்பாடியில், டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலின் மூடியில் ஊசித் துளை இருந்ததைக் கண்டறிந்த நபர், இது போலி மதுபானம் விற்கும் செயலா எனக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
03:09 PM (IST) Oct 24
நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மெஹல் கோஸ்வாமி, ஒரே நேரத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் முழுநேரப் பணிபுரிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
03:05 PM (IST) Oct 24
சவுதியில் புதிய பாஸ்போர்ட் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. புதிதாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களும் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என தூதரகம் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்துள்ளது.