- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தொழிலாளிகளுக்கு 20 சதவிகித போனஸ் – ரூ.5 கோடிக்காக அல்லல்படும் சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் 2!
தொழிலாளிகளுக்கு 20 சதவிகித போனஸ் – ரூ.5 கோடிக்காக அல்லல்படும் சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் 2!
Karthigai Deepam 2 Serial: கார்த்திகை தீபம் 2 சீரியலில் வங்கியில் ரூ.5 கோடி எடுக்க முடியாத நிலையில் தொழிலாளிகளுக்கு 20 சதவிகித போனஸ் கொடுக்க சாமுண்டீஸ்வரி என்ன செய்கிறார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு
கார்த்திகை தீபம் 2 சீரியலில் இப்போது தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க நினைத்து அதனால் ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி எப்படி சமாளிக்கின்றனர் என்பதுதான் இந்த வாரத்தின் டாஸ்க் என்று சொல்லலாம். அதாவது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான பிரச்சனையை வைத்து கார்த்திகை தீபம் 2 சீரியல் எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
கார்த்திகை தீபம் 2
அதாவது கடந்த வாரம், நவீன் கடத்தப்பட்டது, துர்கா பூச்சி மருந்து குடித்தது, அதற்கு முந்தைய வாரம், பரமேஸ்வரி கோயிலுக்கு இடம் கொடுத்தது என்று ஒவ்வொரு பிரச்சனை நடந்து அதற்கு கார்த்திக் தீர்வு காண்பது என்று ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பானது. அப்படி தான் இந்த வாரமும் புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது. அதாவது, மற்ற சீரியல்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு முடிந்த நிலையில் இப்போது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருக்கிறது.
தொழிலார்களுக்கு போன்ஸ்
இதற்காக தனது பேக்டரியில் வேலை பார்க்கும் தொழிலார்களுக்கு போன்ஸ் கொடுக்க கார்த்திக் திட்டமிட்ட நிலையில், வழக்கத்திற்கு மாறாக கிட்டத்தட்ட 5 மட்ங்கு லாபம் வந்துள்ளது. இதன் காரணமாக லாபத்தில் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக கொடுக்கலாம் என்று தனது அத்தைக்கு கார்த்திக் ஆலோசனை வழங்கினார்.
'அன்னம்' சீரியலில் இருந்து வெளியேறிய திவ்யா கணேசன்! இனி இவங்க தான் ரம்யாவா?
சந்திரகலா
சாமுண்டீஸ்வரியும் நல்ல ஐடியா என்று சொல்ல சந்திரகலா அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. அப்படி கொடுத்தால் ரூ.5 கோடி நஷ்டம் வரும் என்று தனது சந்திரகலா சொல்ல, அதையெல்லாம் காதிலே வாங்காத சாமுண்டீஸ்வரி வங்கிக்கு சென்று ரூ.5 கோடி பணம் எடுப்பது பற்றி கேட்க சென்றார். ஆனால், வங்கில் இருந்தது உதவி மேனேஜர் தான். மேனேஜர் அங்கு இல்லை. அதற்கு முன்னதாக சாமுண்டீஸ்வரி வருவது பற்றி தனது கணவர் சிவனாண்டிக்கு சொல்ல, அவரும் அசிஸ்டண்ட் மேனேஜரிடம் சொல்லி எல்லாவற்றையும் சரிக்கட்டி வைத்துள்ளார்.
சாமுண்டீஸ்வரி
மேலும், சாமுண்டீஸ்வரி வரவும் இல்லை மேடம், பணம் கொஞ்சம் அதிகம். அதனால் மேனேஜரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று அசிஸ்டண்ட் மேனேஜர் சொல்லிவிட்டார். இதனால், சாமுண்டீஸ்வரி ஏமாற்றத்துடன் சென்று அடுத்த நாள் காலையில் வந்தார். மேலும், தொழிலாளர்களுக்கு தங்களது குடும்பங்களோடு வீட்டிற்கு வந்துவிட்டனர். மேனேஜரை சிவனாண்டி கடத்தி செல்ல சாமுண்டீஸ்வரி வங்கியிலேயே காத்திருந்தார்.
பல வருட கனவு நிறைவேறிடுச்சு... ஆனந்த கண்ணீர் விட்ட முத்துக்காளை - குவியும் வாழ்த்து!
நம்பரும் நாட் ரீச்சபிள்
மேலும், மேனேஜரும் வரவில்லை. அவரது நம்பரும் நாட் ரீச்சபிள் என்று வரவே வேறு வழியில்லாமல் கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் சென்று உதவி கேட்டு தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் போன்ஸ் கொடுத்தார்களா இல்லையா என்று இன்று மற்றும் நாளைய எபிசோடிகளில் பார்க்கலாம்.