ஜான்வி கபூருக்கு திருமணமா? இன்ஸ்டா பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்!
Janhvi Kapoor Insta Post Viral : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர் திருமணத்தை உறுதி செய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

80-களின் கனவு கன்னி ஸ்ரீதேவி:
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கி, பின்னர் கதாநாயகியாக மாறியவர் தான் ஸ்ரீதேவி. 80-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர், தமிழில் ரஜினி மற்றும் கமல் ஹாசனுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
லேடி சூப்பர் ஸ்டார்:
தமிழை தவிர, மற்ற தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடிபோட்ட ஸ்ரீதேவி, ஒரு கட்டத்தில்... சைலண்டாக, பாலிவுட் பக்கம் ஒதுங்கினார். இவர் இந்தியில் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. எனவே அங்குள்ள ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார். ஒரேயடியாக பாலிவுட்டிலில் செட்டிலாக முடிவு செய்த ஸ்ரீதேவி, பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஸ்ரீதேவியின் மகள்கள் இருவருமே நடிப்பில் கவனம்:
போனி கபூரை, ஸ்ரீதேவி திருமணம் செய்துகொள்ளும் போது 4-மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் தற்காலிகமாக திரையுலகை விட்டு விலகி தன்னுடைய இரு மகள்களையும் கவனித்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி மற்றும் இளைய மகள் குஷி ஆகிய இருவருமே தற்போது பாலிவுட் திரையுலகில் நடிகைகளாக களமிறங்கி கலக்கி வருகிறார்கள்.
தென்னிந்திய மொழியில் கலக்கும் ஜான்வி:
குறிப்பாக ஜான்வி, 'தேவாரா' திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி உள்ளார். இதை தொடர்ந்து ராம் சரண் நடித்து வரும் பொடி படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிபிடித்தக்கது. மகள்கள் இருவரும் திரையுலகில் வெற்றிகரமாக இருக்கும் இந்த தருணத்தை பார்க்க ஸ்ரீதேவி இல்லாதது ஒரு துரதிஷ்டம் என்றே கூறலாம்.
ஷிகர் பஹாரியாவுடன் காதல்:
ஜான்வி கபூர் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், அம்மாவின் பூர்வீகமான தமிழகத்தை மறக்காதவர் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். தொடர்ந்து தமிழ் கலாச்சாரத்தையும் பின்பற்றி வருகிறார். அதே போல் ஜான்வி கபூர் கடந்த சில வருடங்களாக ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார். இவர் இந்தியாவின் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் சுஷீல் குமார் ஷிண்டே அவர்களின் பேரன் ஆவர். பல முறை இருவரும் பொதுவெளியில் வந்து தங்களின் காதலை உறுதி செய்துள்ளனர்.
தொழிலாளிகளுக்கு 20 சதவிகித போனஸ் – ரூ.5 கோடிக்காக அல்லல்படும் சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் 2!
ஜான்விக்கு திருமணமா?
தற்போது ஜான்வி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்ட ஒரு பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. அதாவது, "Save the date 29th Oct" என அவர் குறிப்பிட்டு அதில் ஹார்ட், டான்சிங் கேர்ள், பிளைட் போன்ற எமோஜிகளை பயன்படுத்தியுள்ளார். எனவே ரசிகர்களும் உங்களுக்கு திருமணத்தை அறிவிக்க போறீங்களா? என கேட்டு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் அக்டோபர் 29-ஆம் தேதி அன்று ஜான்வி ரசிகர்களுக்கு சொல்ல போகும் அந்த விஷயம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கூலி முதல் டியூட் வரை... 2025-ல் 100 கோடி வசூலை வாரிசுருட்டிய தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ