நிஜ காந்தாரா..! குல தெய்வத்தை நெஞ்சில் டாட்டூ குத்திக் கொண்ட அஜித்; எக்ஸ்க்ளூசிவ் போட்டோ
கார் ரேஸில் வெளிநாடுகளில் பிஸியாக இருந்த அஜித் இப்போது தீபாவளிக்காக சென்னை வந்திருந்த சூழலில் குலதெய்வ கோயிலான பகவதி அம்மன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று பிரார்த்தனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஜித் குமார் குலதெய்வ கோயில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். மங்காத்தா, விஸ்வாசம், என்னை அறிந்தால், வேதாளம், அமர்க்களம், வீரம், நேர்கொண்ட பார்வை, குட் பேட் அக்லீ என்று ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லீ படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.248.25 கோடி வசூல் குவித்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சினிமாவிற்கு இடைவெளி விட்டுள்ள அஜித் ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட கார் ரேஸில் பிஸியாக இருப்பதோடு இந்தியாவிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். 2025 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது பெற்றார். ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்தில் பிறந்தவர் அஜித். இவருடைய தந்தை பாலக்காட்டை சேர்ந்த தமிழ் பிராமணர் சுப்பிரமணி ஆவார். இதே போன்று அஜித்தின் தாயார் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மோகினி ஆவார். அஜித்திற்கு 2 சகோதரர்கள்.
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுத்த கதிர் – ஷாக்கான முத்துவேல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயில்
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். ரசிகர் மன்றம் இல்லாத ஒரே நடிகர். என்னதான் ஆந்திரா மாநிலத்தில் பிறந்திருந்தாலும் அஜித் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அமர்க்களம் படம் மூலமாக உருவான காதலைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஆண்டு தங்களது 25ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இந்த நிலையில் தான் அஜித் தனது குல தெய்வ கோயிலான ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
கேரளா பாலக்காடு பகவதி அம்மன் கோயில்
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பெருவெம்பா கிராமத்தில் உள்ளது ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயில். அஜித்தின் தந்தை பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஆதலால், பகவதி அம்மன் கோயில் அஜித்தின் குலதெய்வ கோயிலாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு அஜித் தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோருடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
மேலும், அவர் தனது வலது மார்பில் குல தெய்வமான பகவதி அம்மனை டாட்டூவாக வரைந்துள்ளார். இத்தனை ஆண்டு காலமாக அஜித் தனது கையில் டாட்டூவாக எதையும் வரைந்து கொண்டது இல்லை. ஆனால், குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு இப்போது அவர் தனது மார்பில் பகவதி அம்மன் உருவத்தை டாட்டூவாக பச்சைக் குத்திக் கொடுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மருமகள் செயலால் தலைகாட்ட முடியல... மறைந்த யூடியூபர் ராகுல் டிக்கியின் அம்மா கதறல்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.