- Home
- Cinema
- அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!
அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!
Joy Crizildaa son photo viral: நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் மகனின் புகைப்படத்தை அவரது மனைவி ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ளார். அச்சு அசல் தந்தை போலவே இருக்கும் ஜூனியர் மாதம்பட்டியின் வைரல் புகைப்படங்கள்

Joy Crizildaa son photo tagging Madampatty Rangaraj
திரையுலகில் மட்டுமன்றி சமையல் கலையிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான மோதல், கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. விவாகரத்து பெறாமல் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா சுமத்திய குற்றச்சாட்டுகள் இன்னும் சமூக வலைதளங்களில் ஓய்ந்தபாடில்லை.
Hansika Motwani: 15 வயதில் ஹீரோயின், கனவுக்கன்னி முதல் குடும்பத்தலைவி வரை - ஒரு சிறப்பு பார்வை!
சர்ச்சைக்குரிய பின்னணியும் டிஎன்ஏ (DNA) பஞ்சாயத்தும்
ஜாய் கிரிசில்டா கர்ப்பமாக இருந்தபோது, தனது குழந்தைக்குத் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் எனக் கூறினார். ஆனால், இதை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்கவே, விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. ஒருகட்டத்தில் டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டும், மாதம்பட்டி ரங்கராஜ் அதற்கு ஒத்துழைக்கவில்லை என ஜாய் கிரிசில்டா தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தார். அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ஜாய் கிரிசில்டா அதிரடி காட்டி வந்தார்.
ஜூனியர் மாதம்பட்டி "ராஹா" - வைரலாகும் புகைப்படம்
தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், ஜாய் கிரிசில்டா தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
பெயர் சூட்டல்: தனது மகனுக்கு "மாதம்பட்டி ராஹா ரங்கராஜ்" எனப் பெயரிட்டுள்ள அவர், புகைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜையும் 'டேக்' (Tag) செய்துள்ளார்.
அச்சு அசல் அப்பா: இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். "அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜை ஜெராக்ஸ் எடுத்தது போலவே ஜூனியர் மாதம்பட்டி இருக்கிறார்" என்றும், "இனி இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?" என்றும் கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.