- Home
- Cinema
- Tamil Cinema’s Longest Film Title : கோலிவுட்டில் மிக நீளமான டைட்டில் உடன் வெளிவந்த படம் பற்றி தெரியுமா?
Tamil Cinema’s Longest Film Title : கோலிவுட்டில் மிக நீளமான டைட்டில் உடன் வெளிவந்த படம் பற்றி தெரியுமா?
Longest Tamil Movie Title : தமிழ் சினிமாவில் மிக நீளமான டைட்டில் கொண்ட திரைப்படம் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். 1993ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படத்தின் டைட்டில் 52 எழுத்துக்களைக் கொண்டதாம்.

நீளமான டைட்டில் கொண்ட தமிழ் படம்
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் கதையும் திரைக்கதையும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு படத்தின் தலைப்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், ஒரு படத்தைப் பற்றி ரசிகர்களுக்குத் தெரியவரும் முதல் அடையாளமே அதன் தலைப்புதான். சில நேரங்களில் படத்தின் போஸ்டரைப் பார்ப்பதற்கு முன்பே, வித்தியாசமான தலைப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடும். முந்தைய காலங்களில் பெரும்பாலும் படத்தின் கதையையும் கதைக்களத்தையும் அடிப்படையாகக் கொண்டே தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
தியேட்டரில் அதிக மக்கள் பார்த்த தமிழ் படம் பற்றி தெரியுமா? 29 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை
தலைப்புக்கு முக்கியத்துவம்
ஆனால் இன்றைய சூழல் அப்படியில்லை. ரசிகர்களை உடனடியாகக் கவர வேண்டும் என்பதற்காக வித்தியாசமான, புதுமையான, டிரெண்டிங்கில் இருக்கும் வார்த்தைகளைத் தலைப்பாக வைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. சில படங்களின் தலைப்புக்கும் கதைக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் ரசிகர்களை இம்பிரஸ் பண்ணுவதற்காகவே வித்தியாசமான டைட்டில் வைக்கிறார்கள். எண்களைத் தலைப்பாகக் கொண்ட படங்கள், ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட திரைப்படங்கள் எனப் பல வித்தியாசமான முயற்சிகளை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது.
தமிழில் பொருத்தமான தலைப்பு கிடைக்காதபோது ஆங்கிலப் பெயர்களைத் தேர்வு செய்யும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். ஒரு நல்ல தலைப்பைத் தேர்வு செய்வதற்காகவே தனியாக ஆலோசனைக் குழு அமைத்து விவாதிக்கும் அளவுக்கு அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
52 எழுத்துக்களைக் கொண்ட பிரம்மாண்ட தலைப்பு!
இப்படிப்பட்ட சூழலில், தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக நீளமான தலைப்பைக் கொண்ட திரைப்படம் எது என்று தெரியுமா? வெறும் 10 அல்லது 20 எழுத்துக்கள் அல்ல; மொத்தம் 52 எழுத்துக்களைக் கொண்ட தலைப்புடன் 1993-ம் ஆண்டிலேயே ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படம்தான் ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’. பெயரைக் கேட்டாலே ஒருமுறை மூச்சுவிடாமல் வாசிப்பது சவாலாகத் தோன்றும் அளவுக்கு நீளமான தலைப்பு இது.
மன்சூர் அலிகான் நடித்த வித்தியாசமான படம்!
இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நந்தினி நடித்திருந்தார். மேலும், நெப்போலியன் மற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றிருந்தனர். பாலு ஆனந்த் இயக்கிய இப்படத்திற்கு மன்சூர் அலிகானே இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவுப் பணிகளை தங்கர் பச்சான் கவனித்திருந்தார். கடந்த 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான இந்தத் திரைப்படம், பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை.
இருப்பினும், படத்தின் நீளமான தலைப்பு அன்றைய காலகட்டத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்தது. இன்றைய டிரெண்டுக்கு ஏற்றவாறு வித்தியாசமான தலைப்புகளைத் தேடும் தமிழ் சினிமாவில், மூன்று தசாப்தங்களுக்கு முன்பே இத்தகைய புதுமையான முயற்சியை மேற்கொண்டது ஆச்சரியமான விஷயம்தான்.
768 நாட்கள் ஓடி சாதனை; 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே தமிழ் படம்: தமிழ் சினிமாவையே மிரள வைத்த படம் ஹரிதாஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.













