- Home
- Cinema
- OM Movie : இது அதுல்ல... ஓம் பட கதையால் வெடித்த சர்ச்சை; சிம்பு பட கதையை பட்டி டிங்கரிங் பார்த்து நடித்துள்ளாரா தனுஷ்?
OM Movie : இது அதுல்ல... ஓம் பட கதையால் வெடித்த சர்ச்சை; சிம்பு பட கதையை பட்டி டிங்கரிங் பார்த்து நடித்துள்ளாரா தனுஷ்?
OM Movie Story : தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள ஓம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் கதையும் கிட்டத்தட்ட தெரியவந்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

OM Trailer Release
தனுஷ் மற்றும் மம்மூட்டி இணைந்து நடிக்கும் 'ஓம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள இந்த ட்ரெய்லர், படம் ஒரு பக்காவான என்டர்டெய்னராக இருக்கும் என உறுதி அளிக்கிறது. காடுகளின் பின்னணியில் அதிகாரம், மோதல், குற்றம், பழிவாங்கல் ஆகியவை இணைந்த தீவிரமான ஆக்ஷன் டிராமாவாக இப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வரவேற்பை பெறும் ஓம் ட்ரெய்லர்
தனுஷ் ஓம் படத்தில் தனது கெரியரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மம்மூட்டி பர்மா கார்த்திகேயன் என்ற நிழலுலக தாதா கதாபாத்திரத்தில் வருகிறார். சாய் பல்லவியின் கதாபாத்திரம் ஓம் படத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும். சாய் பல்லவி சிபிஐ அதிகாரியான நித்யா ரெட்டியாக நடித்துள்ளார். சாய் பல்லவி தவிர, மற்றொரு கதாநாயகியான ஸ்ரீலீலாவும் இப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீலீலா ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓம் படத்தின் ட்ரெய்லரிலேயே அதன் கதையையும் சொல்லி இருக்கிறார்கள்.
ஓம் பட கதை
அதன்படி, சிறப்புப் படையில் பணியாற்றும் தனுஷ், ஐபிஎஸ் அதிகாரியான சாய் பல்லவியின் உத்தரவின் பேரில் செம்மரக் கடத்தல் கும்பலுக்குள் உளவாளியாக நுழைகிறார். செம்மரக் கடத்தலின் தலைவனாக இருக்கும் மம்மூட்டியின் குழுவில் ரகசியமாகச் செயல்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து காவல்துறைக்கு அனுப்புகிறார். ஆனால், காவல்துறையின் அதிகார அத்துமீறல்களையும் கொடூரமான செயல்களையும் நேரில் பார்க்கும் தனுஷ், ஒரு கட்டத்தில் போலீஸ் தரப்புக்கு எதிராகத் திரும்புகிறார். இதையடுத்து மம்மூட்டியின் கடத்தல் கும்பலுடன் கைகோர்க்கும் தனுஷ், எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறார். அதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.
ஒப்பிடும் நெட்டிசன்கள்
இந்த கதையை கேட்டதும் இது எங்கேயே பார்த்த கதை மாதிரி இருக்கே என தோணலாம். சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதேதான். அதுவே மஃப்டி என்கிற கன்னட படத்தின் ரீமேக் ஆகும். ஷிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் கதையும், ஓம் படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். ஒரு சிலரோ இது புஷ்பா சாயலில் இருப்பதாகவும் கூறுகின்றனர். படம் ரிலீஸ் ஆன பின்னர் தான் இரண்டும் ஒரே கதையா அல்லது வெவ்வேறு ஸ்டோரியா என்பது தெரியவரும்.
ஓம் படக்குழு
தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோருடன் நஸ்ருதீன் ஷா, இந்திரன்ஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒருசேர ஆர்வத்தை தூண்டும் வகையிலான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் உள்ளது. 'அமரன்' என்ற வெற்றிப் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி, இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சாய் அபியங்கர் இசையமைத்து, பின்னணி இசை அமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். யானிக் பென், கெச்சா கம்பக்டி ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளுக்கு நடனம் அமைத்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.













