- Home
- Cinema
- Dhanush : பாடிகாட் ஆக மாறிய மகன்கள்... யாத்ரா, லிங்கா உடன் பழனி முருகன் கோவிலுக்கு விசிட் அடித்த தனுஷ்...!
Dhanush : பாடிகாட் ஆக மாறிய மகன்கள்... யாத்ரா, லிங்கா உடன் பழனி முருகன் கோவிலுக்கு விசிட் அடித்த தனுஷ்...!
Dhanush Visit Palani Murugan Temple : நடிகர் தனுஷ், பழனி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு தன்னுடைய மகன்களுடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Dhanush Visit Palani Murugan Temple
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள புகழ்பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நடிகர் தனுஷ் சனிக்கிழமை சென்றார். தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். அடிவாரத்துக்கு வந்த தனுஷ், அங்கிருந்து ரோப் கார் மூலமாக மலைக்கோயிலுக்குச் சென்றார். கோயிலில் நடந்த கால பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை அவர் வழிபட்டார். சாமி தரிசனம் முடிந்த பிறகு, கோயில் நிர்வாகம் சார்பில் தனுஷுக்கு மரியாதை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் சிறிது நேரம் செலவிட்ட அவர், மீண்டும் ரோப் கார் மூலமாகவே அடிவாரத்துக்குத் திரும்பினார்.
பழனிக்கு விசிட் அடித்த தனுஷ்
பின்னர் மகன்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தனுஷ் வந்திருப்பதை அறிந்த ரசிகர்களும் பக்தர்களும் அவரைப் பார்க்க கோயில் அருகே திரண்டனர். அப்போது தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா, தனுஷுக்கு பாடிகாட் ஆக இருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். பழனி மலைக்கோயில் அதிகாரப்பூர்வமாக அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது சிவகிரி மலையின் உச்சியில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக இது போற்றப்படுகிறது. சுமார் 324 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு வருடா வருடம் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தனுஷின் அடுத்த படம்
முன்னதாக வெள்ளிக்கிழமை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள மாறநாடு கருப்பணசாமி கோயிலில் தனது புதிய படத்தின் பூஜை விழாவில் தனுஷ் கலந்துகொண்டார். இந்த விழாவில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வடிவேலு உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். 'லப்பர் பந்து' படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்துதான் தனுஷ் நடிக்கும் இந்த புதிய படத்தை இயக்குகிறார்.
தேசிய விருது வென்ற தனுஷ்
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தனுஷுக்கு இரட்டை கௌரவம் கிடைத்தது. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட அவருக்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. முதல்முறையாக புதுடெல்லிக்கு வெளியே நடந்த இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்துக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
இயக்குநராக அவர் வாங்கும் முதல் தேசிய விருது இதுதான். 2024-ல் வெளியான இந்தப் படம், தனது குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒருவன் எப்படி குற்றச் செயல்கள் மற்றும் பழிவாங்கும் உலகத்துக்குள் இழுக்கப்படுகிறான் என்பதைச் சொல்கிறது.
அதே விழாவில், 'கேப்டன் மில்லர்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதின் சிறப்பு அங்கீகாரமும் வழங்கப்பட்டது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் 'OM: Chapter 1' படத்தில்தான் தனுஷ் அடுத்து நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

