MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • D56 : முதன்முறையாக இணைந்து நடிக்கும் தனுஷ் - வடிவேலு... சுட சுட ரெடியாகும் லப்பர் பந்து இயக்குநரின் ‘படையல்’

D56 : முதன்முறையாக இணைந்து நடிக்கும் தனுஷ் - வடிவேலு... சுட சுட ரெடியாகும் லப்பர் பந்து இயக்குநரின் ‘படையல்’

D56 Movie Pooja : லப்பர் பந்து இயக்குநரின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தனுஷ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளனர். அப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 25 2026, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
D56 Movie Pooja
Image Credit : X

D56 Movie Pooja

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர் தனுஷ். தற்போது இவரது கைவசம் பல முக்கியமான படங்கள் உருவாகி வருகின்றன. தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் தனுஷுடன் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தை ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.

OM movie : தீபாவளி, ஆயுத பூஜை ரேஸில் இருந்து விலகிய தனுஷின் ஓம்... லீக்கான புது ரிலீஸ் தேதி

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பூஜையுடன் தொடங்கிய D56 படப்பிடிப்பு
Image Credit : X

பூஜையுடன் தொடங்கிய D56 படப்பிடிப்பு

தற்காலிகமாக D56 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு இன்று, செப்டம்பர் 25-ம் தேதி, பூஜையுடன் தொடங்கியுள்ளது. சிவகங்கை பகுதியில் உள்ள மாரநாடு கருப்பசாமி கோவிலில் படத்திற்கு பூஜை போடப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரீத்தி முகுந்தன் நடிக்க உள்ளார். மேலும், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இப்படத்தின் நட்சத்திரப் பட்டியலில் இணைந்துள்ளனர்.

34
படத்தின் டைட்டில் என்ன?
Image Credit : X

படத்தின் டைட்டில் என்ன?

படத்தின் இசையமைப்புப் பொறுப்பை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஏற்றுள்ளார். ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழரசன் பச்சமுத்து இயக்கும் அடுத்த படமாக இது உருவாகுவதால், அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

D56 திரைப்படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு ‘படையல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

44
மதுரை கதைக்களம்
Image Credit : X

மதுரை கதைக்களம்

மதுரையை கதைக்களத்தின் முக்கிய பின்னணியாக கொண்டு, கிராமத்து சூழலில் உருவாகும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தனுஷ் இதுவரை ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட ஒரு கிராமத்து பின்னணியிலான கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush : இயக்குநர் தனுஷுக்கு கிடைத்த முதல் தேசிய விருது... டபுள் சந்தோஷத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
The Paradise Day 1 Box Office : ‘தி பாரடைஸ்’ பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷன் அள்ளியதா? காத்துவாங்கியதா? முதல் நாள் வசூல் நிலவரம் இதோ
Recommended image2
Dorothy Movie Review: சனந்த் - ரிஷிகாந்த் அசாத்திய நடிப்பு... இளையராஜா இசை ட்ரீட்: மிரட்டியதா 'டோரதி'?
Recommended image3
Meesaya Murukku-2 Review: 3 வேடங்களில் மிரட்டிய ஆதி... முதல் பாதி ஜென் ஸி, 2-ம் பாதி ஃபுல் எனர்ஜி; 'மீசைய முறுக்கு-2' எப்படி இருக்கு?
Related Stories
Recommended image1
72nd National Film Awards: 2 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய தனுஷ்..
Recommended image2
Now Playing
அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தனுஷ்..! பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ் ! விஜய் வழியில் அரசியல் ஆட்டம் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved