- Home
- Tamil Nadu News
- எதிர்பார்த்து காத்திருக்கும் 10,12ஆம் வகுப்பு மாணவர்கள்.! முக்கிய அறிவிப்பை சொன்ன பள்ளிக்கல்வித்துறை
எதிர்பார்த்து காத்திருக்கும் 10,12ஆம் வகுப்பு மாணவர்கள்.! முக்கிய அறிவிப்பை சொன்ன பள்ளிக்கல்வித்துறை
10th and 12th class public examination schedule : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனர் தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். இந்த அட்டவணை வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். அந்த வகையில் பள்ளி 10 வது மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தான் முக்கிய தேர்வாகும்.
இந்த தேர்வு தான் மாணவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் அடித்தளமாக உள்ளது. எனவே இந்த பொதுத்தேர்விற்காக மாணவர்கள் ஆர்வமோடு காத்துள்ளனர்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்கி 22 அல்லது 23ஆம் தேதி வரை நடைபெறும். இதனை தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3வது வாரம் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும்.
இதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. ஏற்கனவே சிபிஎஸ்இ பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள பொது தேர்வுக்கான அட்டவணையை மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா, தேர்வு அட்டவணையை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக இன்று காலை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை சந்தித்து தேர்வ அட்டவணையை அவர் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரும் நவம்பர் 4ஆம் தேதி பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .